இளம் வயதில் நரை முடி வருவதற்கு நம்மிடம் வைட்டமின் பி குறைபாடு மற்றும் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவது போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது.


 நம்மில் பலர் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் இளநரை. இளம் வயது தோற்றத்தையே வெள்ளை முடி மாற்றும் போது என்ன செய்வது? என்று தெரியாத போது தான், பலர் கெமிக்கல் டை அடிப்பதில் ஆர்வத்தைக்காட்டுகின்றனர். சமீபத்தில் கலர் டை, கருப்பு நிற டை அடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனால் பலருக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. இருந்தபோதும் தன்னுடைய இளமைக் காலத்தை வீணாக்க விருப்பம் இல்லை என பலர் இச்செயல்களை தொடர்ந்து மேற்கொள்கின்றனர். ஆனால் நிச்சயம் அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் தான் ஏற்படுத்தும். எனவே பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில் கருப்பு நிற முடியைப் பெற நீங்கள் முயற்சிக்கலாம். அதற்கு ஒரு சிறந்த வழியாக கொய்யா இலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.



பொதுவாக இளம் வயதில் நரை முடி வருவதற்கு நம்மிடம் வைட்டமின் பி குறைபாடு மற்றும் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவது போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் கொய்யா இலையில் வைட்டமின் பி மற்றும் சி அதிகளவில் உள்ளது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜின் செயல்பாட்டையும் இது தூண்டுவதால் கொய்யா இலையை நாம் பயன்படுத்தும் போது இளநரை வராமல் தடுக்க முடியும். இதோடு கொய்யாவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மைகள் உள்ளதால் உங்கள் கூந்தலைப் பராமரிக்கவும், அதன் நிறத்தை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. எனவே கெமிக்கல் டை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இனிமேல் கொய்யா இலையையே நம்முடைய முடி பராமரிப்பிற்கு நாம் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.


இத்தனை சிறப்புகள் கொய்யாவில் இருந்தாலும் இதனை எப்படி பயன்படுத்துவது என்ற சந்தேகம் அனைவரும் எழக்கூடும். இதற்கான பதிலையும் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.


கொய்யா இலையைப் பயன்படுத்தி முடியை கருமையாக்கும் வழிமுறைகள்


ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை, 1லிட்டர் தண்ணீர் போன்றவற்றை முதலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் எடுத்து வைத்துள்ள கொய்யா இலைகளை நன்றாக அலசி எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.


சுமார் 20 நிமிடங்கள் கொதித்து முடிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.


கொய்யா இலை தண்ணீர் நன்றாக ஆறியதும், அதனை எடுத்து தலைமுடி வேர் முழுவதும் முழுமையாகப் படும்படி தடவியதோடு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலசி விடுங்கள். இதன் மூலம் தலையின் வேர்கள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது.


இதுபோன்று தொடர்ந்து நீங்கள் மேற்கொள்ளும் போது உங்களுக்கு கருமையான கூந்தல் கிடைக்கப்பெறும். இயற்கையான முறையில் செய்வதால் தைரியமாக நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். எந்தவித பக்கவிளைவுகள் இருக்க வாய்ப்பில்லை.



இளநரைக்கான காரணங்கள்:


இளம் வயதில் வெள்ளை முடிவதற்கு மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் எனும் நிறமி குறைவாக இருப்பது தான் இளநரைக்குக் காரணமாக உள்ளது. மேலும் மெலனினானது வயதாக வயதாகத்தான் குறையும். ஆனால் தற்போது சிறுவயதிலேயே இப்பிரச்சனையை பலர் சந்திக்க நேரிடுகிறது.


குறிப்பாக பரம்பரையும் இளநரைக்கு முக்கியக் காரணமாக உள்ளது. மேலும் வைட்டமின் பி12 குறைபாடு, டென்சன், காப்பர் குறைபாடு,ஊட்டச்சத்து குறைபாடு, இரத்தச்சோகை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தைராய்டு பிரச்சனைகளும் இதற்கு முக்கியக்காரணமாக கூறப்படுகிறது. இதனையெல்லாம் சரிசெய்ய முயற்சித்தாலே உங்களது இளநரைப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.