Watch Video: சிப்ஸ் பாக்கெட்களால் அலங்கரிக்கப்பட்ட மணமகனின் கார் - நீங்களே பாருங்க!

Watch Video: திருமண விழாவில் மணமகனின் அலங்கரிக்கப்பட்ட காரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continues below advertisement

திருமண விழாவில் மணமகன் சிப்ஸ் பாக்கெட்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Continues below advertisement

சிப்ஸ் பாக்கெட்டால் அலங்கரிக்கப்பட்ட கார்:

அனைவரின் வாழ்விலும் திருமணம் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. பலருக்கும் திருமண நிகழ்வை தங்களுக்கு ஏற்றார்போல வடிவமைக்க வேண்டும் என்ற ஆசையிருக்கும். திருமண செய்யும் நாள் மிகவும் நெகிழ்ச்சியாகவும் மறக்க முடியாத இனிமையான நினைவுகளால் நிரம்பியிருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கும். 

போலவே, சமூக வலைதளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. திருமண விழாவில் மணமகன் உருளைக் கிழங்கு சிப்ஸ் பாக்கெட்களால் வடிவமைக்கப்பட்ட காரில் வந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

வீடியோவில், பலரும் காரில் வரும் மணமகனை வரவேற்கின்றனர். அதில் பல்வேறு வகையான உருளைக் கிழங்கு சிப்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. பலருக்கும் சிப்ஸ் மிகவும் பிடித்தமாக ஒன்றாக இருக்கும். அதுவும் உருளை கிழங்கு சிப்ஸ் என்றால் ரொம்பவே ப்ரியமாக இருக்கும். இதற்கு பலரும் இந்திய திருமணங்களில் இப்படியான சுவாரஸ்யமான விசயங்கள் நடைபெறும் என்று வீடியோவில் கமென்ட் செய்து வருகின்றனர். 

சிப்ஸ் பிரியரா மாப்பிள்ளை:

இந்த வீடியோ 1.7 மில்லியன் லைக்ஸ் பெற்றதுள்ளது. காரில் மலர்கள் வைத்து அலங்கரிப்பதோடு இல்லாமல், கார் முழுவதும் சிப்ஸ் பாக்கெட்கள் ஒட்டப்பட்டு வடிவமைத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். இது பலருக்கும் பிடித்ததாக இருக்கும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். சிலர், இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காராக இருந்திருக்கும் என்று கமென்ட் செய்துள்ளர். 

’ மணமகன் சிப்ஸ் ப்ரியராக இருப்பாரோ!’ ’திருமணத்திற்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக சிப்ஸ் பாக்கெட்களை எடுத்து சாப்பிடலாம். ‘ ’சூப்பர் கார் டிசைன்!’, ’மிகவும் அழகாகவும் விளையாட்டுத்தனம் நிறைந்ததாக இருக்கிறது!’ என்று பலரும் இந்த வீடியோவில் கமென்ட் செய்தும், அதை பகிந்து வருகின்றனர்.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola