Green Tea Benefits in Tamil: க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என நினைத்து ஒரு நாள் முழுவதும் க்ரீன் டீ குடித்து விட்டு எதையும் சாப்பிடமல் இருந்தால் வீட்டில் வாங்கி வைத்த க்ரீன் டீ அளவு தான் குறையும். உடலில் சேர்ந்த எடை குறைய வாய்ப்பு இல்லை. க்ரீன் டீ குடிப்பதால் என்ன மாதிரியான நன்மைகள் விளைகிறது என தெரிந்து கொள்வோம்.


க்ரீன் டீ குடிக்க சரியான நேரம் எது ?




மாலை வேலைகளில் எப்போதும் குடிக்கும் டீ அல்லது காபிக்கு மாற்றாக க்ரீன் டீ குடிக்கலாம். அடிக்கடி டீ , காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள்.


எவ்வளவு குடிக்கலாம் ?


ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவு குடித்தால் போதுமானது. அதற்கு மேல் குடிப்பது தேவை இல்லாதது.


என்ன ஊட்டச்சத்துகள் இருக்கிறது?





இதில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், பாலிபினால்ஸ், போன்ற ஊட்டசத்துக்கள் இருக்கிறது.


சாப்பிட உடன் குடிக்கலாமா?


சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அல்லது சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடிக்கலாம். சாப்பிட உடனே இதை குடிக்க கூடாது. க்ரீன் டீ குடித்த பிறகு எதையும் சாப்பிட கூடாது.


க்ரீன்  டீ யில் இருக்கும் நன்மைகள்




இது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இது டையூரிக் பண்புகளை கொண்டுள்ளது. அதனால் சிறுநீர் அதிகம் வெளியேறும். இது வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடை குறைக்கும். இது ஹார்மோன் மாற்றங்களை சமநிலை படுத்துகிறது.


க்ரீன் டீ அதிகமாக குடித்தால் என்ன ஆகும்


 


க்ரீன் டீ அதிகமாக குடித்தால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது. உணவில் இருக்கும் இரும்பு சத்து உடலுக்கு கிடைக்காமல் போகும். அதனால் சில குறிப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இரவு நேரங்களில் க்ரீன்  டீ குடிப்பதால் தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படும். இதில் இருக்கும் காபின் ஆனது தூக்கமின்மை ஏற்படுத்தும்.


க்ரீன் டீ எப்படி தயாரிப்பது


டீ யின் இலைகளை காயவைத்து, உலர்ந்த இலைகளை பயன்படுத்தலாம். இலைகளை வெண்ணீரில் போட்டு வைத்து 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். இப்போது பல்வேறு பிளேவர்களில் இது கிடைக்கிறது. துளசி, எலுமிச்சை, புதினா போன்று சுவைகளில் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த சுவைகளில் இதை பருகலாம்.




க்ரீன் டீ இலைகளை போட்டு தண்ணீரை எப்போது கொதிக்க வைக்க கூடாது. கொதிக்க வைப்பது தவறான ஒரு முறையாகும்.


 


தினம் 2 கப் மட்டும் குடித்தால் போதுமானது. அளவாக எடுத்து முழுமையான பயன்களை அனுபவிக்கலாம்.