திராட்சையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணிலடங்காதவை என சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.திராட்சை என்று கூறியதும் நம் நாவில் சிறிதான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை நமக்கு நினைவுக்கு வரும்.
இதைப் போலவே உலகளாவிய அளவில் திராட்சை என்று கூறியதும், ஒயின் என்று சொல்லக்கூடிய திராட்சை ரசமே ஞாபகத்துக்கு வரும்.இந்திய அளவில் திராட்சை உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இன்னும் கூட வருடத்திற்கு ஒருமுறைதான் இங்கு மகசூல் இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை கம்பம் பள்ளத்தாக்கில் 3500 ஏக்கருக்கு திராட்சை விளைகிறது.இதே போலவே கேரளாவிலும் திராட்சை அதிக அளவு விளைகிறது.
அர்கா ஹான்ஸ்,மாணிக்சமான்,சோனாகா,சரத்(விதையில்லாதது).பன்னீர் திராட்சை,அனாப்-சாகி, தாம்சன்(விதையில்லாதது),அர்காவதி,அர்கா சியாம்,அர்கா காஞ்சனா என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன.இது பச்சை, இளஞ்சிவப்பு,கறுப்பு, கருநீலம், மஞ்சள், எனப் பல நிறங்களிலும் விளைகிறது. விதை இல்லாத திராட்சையை காட்டிலும் விதையோடு இருக்கும் திராட்சை பழங்களுக்கு என்றுமே ஒரு தனித்தன்மை இருக்கிறது.
வெஸ்டர்ன் நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகக் சமீபத்தில் திராட்சை உண்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. திராட்சை ஆக்ஸிஜனேற்ற மரபணுக்களின் அளவை அதிகரிக்கிறது.மேலும் கொழுப்புள்ள உணவுகளுடன் இதை சாப்பிடும் போது கொழுப்பினை கரைத்து நமது ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.
டாக்டர் ஜான் பெஸுடோ மற்றும் அவரது வெஸ்டர்ன் நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகக் குழு சமீபத்தில் திராட்சை நுகர்வு மற்றும் ஆரோக்கியம் , ஆயுட்காலம் மீது குறிப்பிடத்தக்க, வியக்க வைக்கும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என ஆய்வுகளை வெளியிட்டது.
இதே போல பிரபல இதழான ஃபுட்ஸ்' வெளியிடப்பட்ட கட்டுரையின்படி ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவில் திராட்சை ரசத்தை பருகி வந்தால் கல்லீரலில் படியும் கொழுப்பின் அளவை வெகுவாக குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் ஜெஃப்ரி ஐட்லின் தலைமையிலான ஆராய்ச்சி குழு உறுப்பினர் திராட்சை மரபணுக்களை மேம்படுத்துவதுடன் மட்டுமல்ல, வளர்சிதை மாற்றத்தில் சிறப்பான தன்மைகளை தருகிறது என்பது தெரிய வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக திராட்சையில், மாவுச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வைட்டமின் டி மற்றும் சர்க்கரை உள்ளன. திராட்சை பழத்தில் முகம், தலை முடி மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிக அதிகமாக உள்ளன. திராட்சையை உண்டால் நமது உடலுக்கு உடனடியாக தேவையான குளுகோஸ் கிடைக்கிறது. மேலும் நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும், வலிமையும் அதிகரிக்கும்.
இப்படி ஒருபுறம் உங்கள் நலத்துக்கும் மூளை செல்கள் இன்றியமையாதாக இருக்கும் இந்த திராட்சை பைப் பிடிக்கப்பட்ட பொருளாக உலகெங்கிலும் பலம் வருகிறது இதன்படி ஜாம் செய்வதற்கும் உலக அளவில் இது பயன்படுத்தப்படுகிறது ஒயின் மற்றும் நிகர் செய்வதற்கும் இது மிகப்பெரிய அளவில் வர்த்தக தனிமையை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே முந்திரி பயிரின் அளவுக்கு இணையான வியாபார மதிப்பினை கொண்டு இருக்கிறது ஆகையால் இதனை கொடி முந்திரி என்றும் அழைக்கின்றார்கள்.
இதைப் போலவே திராட்சை விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெயானது மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உலகெங்கிலும் வியாபார சந்தையில் வெற்றி நடை போடுகிறது.இப்பொழுது சிறப்புக்கள் வாய்ந்த திராட்சையை வாரத்திற்கு ஒரு முறை எனும் உட்கொண்டு வந்தால் நமக்கு நிறைய நன்மைகள் உடல் அளவில் கிடைக்கும்.