உடல் எடை பிரச்சனை என்பது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது. மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, மன அழுத்தம் உள்ளிட்டவை உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளன. உடல் எடை பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கிறது. உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தாங்கள் ஆசைப்பட்ட உடைகளை உடுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
உடல் பருமன்:
சிலர் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். தீவிர டயட் பாலோ செய்கின்றனர். மேலும் சிலர் இதற்கும் ஒரு படி மேலே சென்று உடல் எடையை குறைப்பதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். முறையற்ற டயட்டும், கண்ட மருந்து மாத்திரைகளும் உடல் எடையை குறைப்பதற்கு உதவாது மாறாக சிலசமயம் இவை உடல் எடையை அதிகரிக்க வழி வகுக்கலாம். மேலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தற்போது நாம் இஞ்சி - துளசி பானம் உடல் எடையை குறைப்பதில் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது என்று தான் பார்க்க போகின்றோம்.
துளசியில் யூஜெனால் என்ற அத்தியாவசிய எண்ணெய் உள்ளது, இது மூட்டுகள் மற்றும் செரிமான மண்டலத்தில் அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கு பெயர் பெற்றது. இம்மூலிகை ஒரு லேசான டையூரிடிக் மற்றும் ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றத்தால் நிறைந்துள்ளது. ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது என்றும் சொல்லப்படுகின்றது.
காலை வேளையில் ஐந்து முதல் ஆறு துளசி இலைகளை தண்ணீருடன் உட்கொள்வது உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்" என்று சொல்லப்படுகிறது. இது, கலோரிகளை எரிப்பதற்கும், இயற்கையாகவே நச்சுகளை அகற்றுவதற்கும் உதவுகிறது.
உடல் எடை குறைப்பதில் இஞ்சியின் பங்கு
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற கலவை செரிமான நொதிகளின் உற்பதியை தூண்டுவதாக சொல்லப்படுகின்றது. இது ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்துகின்றது. உடலி உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது.
துளசி-இஞ்சி பானம் தயாரிப்பது எப்படி?
ஐந்து முதல் ஆறு ஃப்ரெஷ்ஷான துளசி இலைகள் மற்றும் ஒரு அங்குல துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து, அது பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சுவைக்காக நீங்கள் இதனுடன் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பானத்தை உங்கள் காலை உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பானத்தை அளவோடு குடிப்பது நல்லது.
குறிப்பு:இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீரியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.