நெய் மைசூர் பாக் செய்ய தேவையான பொருட்கள்


கடலைமாவு – 1 கப், சர்க்கரை – 1 கப், நெய் – 1 1/2 கப். கடலை மாவை எந்த கப்பில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ, மற்ற இரண்டு பொருள்களையும் அதே கப்பில் அளந்து எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும்.


செய்முறை



முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலை மாவை போட்டு வறுத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கடலை மாவை லேசாக வறுத்தால் போதும். கடலை மாவின் நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


இந்த மாவை சல்லடையில் போட்டு கட்டிகள் இல்லாமல் சலித்து  வைத்துக் கொள்ளுங்கள். மாவை ஒரு அகலமான கிண்ணத்தில் போட்டு, அதில் 1 கப் அளவு  உருகிய நெய் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைத்து இந்த கலவையை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் 1/2 கப் நெய் அப்படியே இருக்கட்டும்.


ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 கப் அளவு சர்க்கரையை போட்டு, அதே கப்பில் 1/2 கப் அளவு தண்ணீரை, சர்க்கரையில் ஊற்றி கரைத்து பாகு காய்ச்ச வேண்டும். சர்க்கரை ஒரு கம்பிப் பதம் பாகு வந்த உடனேயே சர்க்கரை பாகில் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு ஏற்கனவே கடலை மாவை நெய்யில் கரைத்து வைத்திருக்கும் அந்த கலவையை, இந்த சர்க்கரை பாகில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து விடவேண்டும். இந்த கலவையை கைவிடாமல் கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.


மைசூர்பாக் அல்வா பதத்திற்கு திரண்டு வந்த உடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.  ஒரு அகலமான தட்டில் கொஞ்சமாக நெய் தடவி தயாரான மைசூர்பாவை அதில் கொட்டி எல்லா பக்கத்திலும் சமமாக செட் செய்து விட வேண்டும். இந்த மைசூர்பாக் 9 மணி நேரம்வரை ஆற வேண்டும். அதன் பிறகு ட்ரேவை கவிழ்த்துப் போட்டால் மைசூர்பாக் அப்படியே தனியே வந்து விடும். 


இப்போது ஒரு கத்தியைக் கொண்டு உங்களுக்கு தேவையான வடிவத்தில் இந்த மைசூர் பாக்கை வெட்டி ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். முதன்முதலில் முயற்சி செய்து பார்க்கின்றீர்கள் என்றால் சிறிய அளவில் பொருட்களை எடுத்து செய்து பார்க்கலாம். 


மேலும் படிக்க


G20 Summit: முடிந்தது ஜி20 மாநாடு..! ஆனால், மீண்டும் நவம்பரில் ஜி20 கூட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு


CM Stalin: அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜி20 மாநாட்டில் நடந்தது என்ன?