ஒரு நாளை நன்றாகத் தொடங்குவதற்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது  ஆற்றலைத் தருவதுடன்  உடலில் வளர்சிதை மாற்றம் மற்றும் பிற செயல்பாடுகளைத் தொடங்க உதவுகிறது. இரவில் நன்றாகத் தூங்கினால்தான் ஆரோக்கியமான நாளைத் தொடங்க முடியும் என்ற உண்மையை நாம் உணர்ந்தும் அதற்கான முயற்சிகளை எடுக்க தவறுகிறோம். சிலநேரங்களில் அறியாமலேயே நாம் அனைவரும் இரவில் நமது தூக்கத்தை சீர்குலைக்கும் சில தவறுகளை செய்கிறோம். 




இந்தக் கட்டுரையில், இரவில் நாம் செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்து பார்க்கலாம். 


 இரவு உணவிற்கும் உறங்குவதற்கும் இடையில் போதுமான நேரத்தை ஒதுக்காமல் இருப்பது:


நாம்  இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும். உறங்கச் செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன் சாப்பிடுவது இரவில் நெஞ்செரிச்சலைத் தூண்டி, தூங்குவதை கடினமாக்குகிறது. நமது வளர்சிதை மாற்றம் இரவில் வேலை செய்வதை நிறுத்துகிறது, எனவே செரிமானத்தை எளிதாக்க இரவு உணவு சாப்பிடுவதற்கும் படுக்கையில் படுப்பதற்கும் இடையில் போதுமான நேரத்தை ஒதுக்க  வேண்டும். 


கனமான இரவு உணவு:


"காலை உணவை அரசனைப் போலவும், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள்" என்பது உணவு முறைக்கான ஆகச்சிறந்த பழமொழி. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் மாவுச்சத்து நிறைந்த இரவு உணவை உட்கொள்வது செரிமானத்தை கடினமாக்குகிறது, இதனால் உடல் பருமன் தான் அதிகரிக்கும். மேலும், இது குடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, அஜீரணம், மலச்சிக்கல், குடல் பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே இரவில் குறைந்த அளவில் உண்ண வேண்டும். 




3. போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது:


குறைவாக சாப்பிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் சிலர் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றனர்; பொதுவாகவே நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்வது, நீங்கள் நீண்ட நேரம் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.  நள்ளிரவு பசியைத் தடுக்கிறது. இதனால் மிகவும் நிம்மதியாக உறங்க முடியும். சரிவிகித உணவும் உடலுக்கு எப்போதும் அவசியம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 


4.டீ, காபி உட்கொள்வது:


உறங்கச் செல்ல முடிவெடுத்துவிட்டால் காபி மற்றும் தேநீர் அருந்த வேண்டியதை தவிர்க்க வேண்டும். நம்மில் பலருக்கு சாக்லேட் சாப்பிடுவது அல்லது சாப்பாட்டுக்குப் பிறகு குளிர்பானம் அருந்தும் பழக்கம் இருக்கும். இது உடனே உறங்குவதை தடுக்கிறது. 




 5. மது அருந்துதல்:


மது அருந்துவது நன்றாக தூங்க உதவும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. தூக்கத்தின்  சுழற்சியை சீர்குலைப்பதால், மூளையின் செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கும் நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது. 


6. ஸ்கிரீன் டைம்


தூக்கச் செல்வதற்கு குறைந்த பட்சம் 45 நிமிடங்களுக்கு முன்பாகவே மொபைல் பயன்படுத்துவது, டிவி பார்ப்பது, லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.