நல்ல இரவு தூக்கம் உங்கள் கெட்ட நினைவுகளிலிருந்து விடுபட உதவும் என்று புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
சில நினைவாற்றல் நமது அறிவாற்றல் செயல்பாட்டைக் குறைத்து, மன ஆரோக்கியத்தை மோசமாக்கும் போது, வெறுப்பூட்டும் நினைவுகள் அதிகமாக இருக்கும்.
2024 ஆம் ஆண்டு சைக்காலஜிக்கல் அண்ட் காக்னிட்டிவ் சயின்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், விழித்திருக்கும் போது நேர்மறை நினைவுகளைச் செயல்படுத்துவது மனிதர்களில் எதிர்மறை தாக்கத்தையும் மனச்சோர்வு அறிகுறிகளையும் குறைக்கும். அத்துடன் மனசோர்வையும் தணிக்கும் என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.
அதேநேரம் நல்ல தூக்கத்தின்போது நேர்மறையான நினைவுகள் அதிகரிக்கவும் எதிர்மறையான நினைவுகளை அகற்றவும் செய்யும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நவி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் பார்த் நாக்தா கூறுகையில், நமது கெட்ட நினைவுகளை அழிக்க தூக்கம் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். முதலாவதாக, நமது நினைவாற்றலையும் உணர்ச்சி செயலாக்கத்தையும் ஒருங்கிணைப்பதற்கு தூக்கம் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையில்லாத நரம்பு பாதைகளைக் குறைப்பதன் மூலம் தேவையற்ற எண்ணங்களைக் குறைக்கும் சினாப்டிக் ப்ரூனிங்கிங் என்று ஒன்று நம் உடலில் இருப்பதாக டாக்டர் நாக்டா விளக்கினார்.
இது மூளையின் ஒழுங்கற்ற தன்மையைக் குறைக்க அல்லது வடிவமைக்க உதவுகிறது. மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் கட்டுப்படுத்தவும் தூக்கம் உதவுகிறது. கனவுகள் நமது நினைவுகளை குறைவான வேதனையான முறையில் மீண்டும் ஒழுங்கமைக்க உதவுகிறது.
ஒன்று அல்லது இரண்டு நல்ல இரவு தூக்கம் கூட நமது உணர்ச்சி துயரத்தைக் குறைக்க உதவும்.
"பெரிய மாற்றங்களைக் காண, வழக்கமாக நாம் செய்யும் நடைமுறைகளில் தூக்கத்தையும் இணைப்பதால் கிடைக்கும். அதாவது ஒரு வாரத்தில் தூக்க முறைகள் சீராக இருக்க வேண்டும். உடற்பயிற்சி, தியானம், அறிவாற்றல், நடைபயிற்சி போன்ற பிற வாழ்க்கை முறை மாற்றங்களுடன் வழக்கமான தூக்க முறைகளை இணைக்கும்போது, அது நல்ல பலனைத் தரும்," டாக்டர் நாக்டா கூறுகிறார்.
சஃப்தர்ஜங் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஷ்ரேஷ்டா குப்தா கூறுகையில், “ஒரு நல்ல தூக்கம் நினைவாற்றல் ஒருங்கிணைப்பு, உணர்ச்சி செயலாக்கம், மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்பு கொண்டது. அதிகாலை 2லிருந்து 4 மணிவரை தூக்கம் மிகவும் நல்லது. இந்த காலகட்டம் நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும். மூளை நரம்புகள் வலுவடையும்” எனத் தெரிவித்தார்.