பூண்டில் அதிகளவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி பயாடிக் மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளது. இதோடு ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவைக்குறைப்பதற்கும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.


இன்றைக்கு  சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் நீரழிவு நோய். இதனை ஆரம்பித்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால் உயிருக்குக் கூட ஆபத்தான சூழலை ஏற்படுத்தும். எனவே ஆரம்பித்தில் இருந்தே உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலையாக வைத்திருக்க வேண்டும். எத்தனையோ ஆங்கில மருந்துகளை நாம் பயன்படுத்திவந்தாலும், நிரந்தர தீர்வு காண முடியாது. ஆனாலும் நம்முடைய உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது நீரழிவு நோயை ஒரளவிற்கு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம்தான் பூண்டு.



இயற்கையாகவே பூண்டில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி பயாடிக் போன்ற மருத்துவக்குணங்கள் உள்ளதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முக்கியமாக நீரழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் அமினோ அமில ஹோமோசிஸ்டீனைக் குறைக்கவும் உதவியாக உள்ளதால் தான் தினமும் நம்முடைய அன்றாட சமையலில் பூண்டை உபயோகப்படுத்துகிறோம். இதனை நேரடியாக சாப்பிடுவதற்கு மிகவும் காட்டமாக இருக்கும். எனவே தினமும் பூண்டை அப்படியே சாப்பிடுவதற்குப் பதிலாக பூண்டு பால், பூண்டு தேநீர் செய்து பருகலாம். குறிப்பாக பூண்டு தேநீர் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது மற்றும் எவ்வாறு இதனைப்பயன்படுத்தலாம் என இங்கே தெரிந்துக்கொள்வோம்.


சர்க்கரை நோயாளிகளுக்கான பூண்டு தேநீர் செய்யும் முறை:


பூண்டு – 6 பல்


தண்ணீர் – 300 சீரகம்


சின்ன சீரகம்– ஒரு சிட்டிகை


ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்


செய்முறை


முதலில் பாத்திரத்தில்  தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனுடன்தோல் உரித்து தட்டி வைத்திருக்கும் பூண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும்.


அதன்பின்னர் தண்ணீர் இருக்கும் பாத்திரத்தை மூடிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து அதைத் திறந்து பார்த்தால் பூண்டு சாறு சீரகத்தின் தன்மை தண்ணீரில் இருக்கும். அதில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் விடவேண்டும்


இந்த நீரை வடிகட்டி ஒரு கப் அளவுக்கு தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, நீரழிவு நோயைக்கட்டுப்படுத்தவும் உதவியாக உள்ளது.



பூண்டின் நன்மைகள்


நாம் அன்றாட சமையலில் சேர்த்துக்கொள்ளும் பூண்டு உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. எனவே  இதன் மூலம் இன்சுலின் செயல்திறன் மேம்படுகிறது.


நீரிழிவு நோயாளிகளின் அமிகோ அமில ஹோமோசிஸ்டீனை குறைப்பதோடு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை மேம்படுத்துகிறது.


உயிரிணுக்களின் மீள் உருவாக்கத்த செயல்படுத்துவதால், கணையத்தில் பீட்டா செயல்களை மேம்படுத்துகிறது.


டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பூண்டு தண்ணீர் மிகுந்த நன்மைகளைக் கொடுக்கிறது.


பூண்டில் பல்வேறு மருத்துவக்குணங்கள் நிறைந்திருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக இதனை உபயோகிக்ககூடாது எனவும் இதனால் தேவையற்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.