முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு பொதுவாக எல்லோரிடத்திலும் சிறப்பான இடம் உண்டு. இந்த வருடம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி  விநாயகர் சதுர்த்தி(Vinayagar Chaturthi) ஆனது கொண்டாடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காரணத்தினால் தடை உத்தரவு போடப்படட நிலையில் மக்கள் விரும்பியவாறு பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி ஆனது  கொண்டாடப்படவில்லை . இதனை தொடர்ந்து சென்ற ஆண்டும் சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.  


விநாயகர் சதுர்த்தி என்பது இந்தியாவில் ஒரு கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் ஒரு முக்கிய பண்டிகையாக உள்ளது . விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டாலே நமது தெருக்கள் வீடுகள் மற்றும் ஊர்களில் விழாக்கோலம் பூண்டிருக்கும். வீதிக்கு வீதி விநாயகர் சிலைகளை வைத்து விநாயகரை மலர்களால், தேங்காவால் பல்வேறு வகைகளில் அவரை அலங்கரித்து மக்கள் வழிபடுவார்கள்.


விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் கொழுக்கட்டை ,பொங்கல், கடலை பழங்கள்  போன்றவை விநாயகருக்கு வித விதமாகவும் படைக்கப்பட்டிருக்கும். நமது ஊர்களில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே ரேடியோக்களின் பாட்டுச்சத்தம்  நடுவில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலை ஆனது அழகாக  வைக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில் விநாயகப் பெருமான் விதவிதமான வடிவங்களில் வீதிகள் தோறும் உலா வருவது கண்கொள்ளாக்
காட்சியாகும்


இந்த பண்டிகையானது  ஒருநாள் முடியும் பண்டிகை அல்ல. இந்த பண்டிகையானது ஆகஸ்ட் 31 தொடங்கி செப்டம்பர் 9 வரை நடைபெறும். அதுவரை விநாயகர் சிலையானது வைக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து அல்லது பத்து நாட்கள் வழிபாடு முடிந்த பின்பு அவற்றை நீர்நிலைகளில் கரைக்கின்றனர் .


பொதுவாகவே நம் நாட்டில் விநாயகர் பற்றி பல வரலாறு கதைகள், பல கட்டுக்கதைகள் மற்றும் பல புராணக் கதைகளும் உள்ளன. அதேபோல் விநாயகருக்கு பல பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு விதமான பெயர்களில் விநாயகரை குறிப்பிட்டு அழைக்கின்றனர்.


மொத்தமாக விநாயகருக்கு 108 பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு பெயர்களுக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பான அர்த்தம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் விநாயகரது ஒவ்வொரு பெயர் மற்றும் அதன் சிறப்புகளை கொண்டு வழிபடப்படுகிறது.


 முதலில் விநாயகர் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம். விநாயகர் என்ற சொல்லானது ஒரு கூட்டு சமஸ்கிருத வார்த்தையை கொண்டுள்ளது. விநாயகர் என்ற சொல் பல மக்கள் மற்றும் இறைவன் என்று பொருள்படும்.


அதேபோல், கணபதி என்ற பெயர் சிவன் பார்வதி மகன் என்று குறிப்பிடப்படுகிறது. ஈசனின் புத்திரனாகவும் முழு முதற் கடவுளாகவும் இருந்து இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் விநாயக பெருமானுக்கு நமது தமிழ் நாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இதனை பற்றி சிறிது ஆழமாக ஆராய்ந்தோமானால் இன்னும் நிறைய பெயர்கள் நமக்கு இருப்பது தெரிய வருகிறது.


உண்மையில், ஞானம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதியான விநாயகர் 108 பெயர்களால் அழைக்கப்படுகிறார்.


விநாயகர் பெருமாளின் ஒரு சில பெயர்களை நாம் இங்கே காணலாம்.


 கணேசன், ஏகதந்தன், கணபதி, ஏரம்பன், விநாயகன், கணநாதன், கங்கைபெற்றோன், அங்குசதாரி, உண்டிராஜன், பிள்ளையார், ஒற்றைக்கொம்பன், கயமுகன், மயூரேசன், பரசுபாணி, கசானனன், லம்போதரன், அங்குசபாசதரன், கஜானனன், ஒற்றைமருப்பினன், ஹேரம்பன், பாசாங்குசதரன், அங்குசபாணி,  வக்ர துண்டன்,  அத்திமுகத்தோன், ஜேஷ்டராஜன்,  நிஜஸ்திதி, முறக்கன்னன், அம்பிகைதனயன், ஆசாபூரன், ஆகுயர்த்தோன், கணாதிபன்,
வரதன், ஆகீசன், விகடராஜன், வல்லவைமன், முன்னோன், மகா வித்யா கணபதி, விக்கினநாயகன்,  நிதி கணபதி, சித்தி புத்தி விநாயகர், மகோதரன், சயன கணபதி, வத்திரதுண்டன், சந்தான லட்சுமி கணபதி, க்ஷிப்ர ப்ரஸாத கணபதி,  தரணிதரன், விக்கினராசன், சித்திகணபதி, சித்தி - புத்தி கணபதி, விகடசக்கரன், பிரும்மணஸ்தபதி, ஆனைமுகத்தோன், வேழமுகத்தான், ருணஹரள கணபதி, மோதகப்பிரியன், தும்பிக்கை ஆழ்வார், நர்த்தன கணபதி, மாங்கல்யேசர், லக்ஷ்மி கணபதி, விக்கினேசுவரன், பார்ப்பதிபுதல்வன்,  கௌரிமைந்தன், திரியம்பகன், மகா கணபதி, மூத்தோன், சர்வ பூஜ்யர், வினைதீர்த்தான், அரிமருகன் , விக்கினேசன், விக்னராஜன் ,
ப்ரம்மண கணபதி, குரு கணபதி, வாமன கணபதி,  சங்கடஹர கணபதி, குமார கணபதி , ஊர்த்துவ கணபதி, அர்க கணபதி, சக்தி கணபதி,  உத்தண்ட கணபதி, ஹரித்ரா கணபதி, உச்சிட்ட கணபதி,  சிங்க கணபதி, மும்முக கணபதி ,சிருஷ்டி கணபதி,  துவிமுக கணபதி,  யோக கணபதி, துர்க்கா கணபதி,  வீரகணபதி,  புஷ்ப கணபதி, ரணமோசன கணபதி ,ஆலம்பட்டா,அனந்தசித்ரூபயமம்,  வெயிலுக்குகந்த விநாயகர், சர்வ சக்தி கணபதி, பிரளயங்காத்த விநாயகர், படிக்காசு விநாயகர் ,
பொள்ளாப்பிள்ளையார் ,விகடசக்கர விநாயகர் ,மணக்குள விநாயகர் ,ஐங்கரன்.
என்ற பல சிறப்பு பெயர்களை கொண்டு  விநாயகர்  வணங்கப்பட்டு வருகிறார்.


விநாயகரின் ஒரு சில பெயர்கான சிறப்புகள்:


1.லம்போதரர் - பெரிய வயிறு உடையவர்.
2.விகடன் - புத்திக்கூர்மை மிக்கவர்.
3.துமகேது - அசுரன் தாமோதரனை வென்றவர்
4.கணாத்யட்சர் - பூதகணங்களுக்கு எல்லாம் தலைவர்.
5.பாலச்சந்திரர் - பிறை சந்திரனை சூடியவர்.
6.கஜானனர் - யானை முகம் கொண்டவர்.
7.வக்ரதுண்டர் - வளைந்த துதிக்கை கொண்டவர்.


8.சூர்ப்பகர்ணர் - முறம் போன்ற காது கொண்டவர்.
9.ஹேரம்பர் - ஐந்து முகங்களை கொண்டவர்.
10.ஸ்கந்த பூர்வஜர் - கந்தன் எனும் முருகனுக்கு முன் பிறந்தவர்.


இவ்வாறு பல சிறப்புகள் மற்றும் பல பெயர்களைக் கொண்டு விநாயகரை தரிசிப்பதில் பெருமகிழ்வு அடைகிறோம்.