நாள்: 25.08.2022
நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம் :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே,
வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உறவினர்களின் வழியில் பொறுமையுடன் செயல்படவும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே,
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மறைமுக திறமைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். நிம்மதி நிறைந்த நாள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே,
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் கைகூடும். சில அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவின் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே,
குடும்பத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் புதிய அறிமுகமும், ஆதாயமும் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனத்துடன் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே,
உத்தியோகம் சார்ந்த பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கனிவு வேண்டிய நாள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே,
மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே,
அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை உருவாக்கும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே,
உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பத்திரம் சார்ந்த துறைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சலனம் நிறைந்த நாள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே,
குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு நீங்கும். பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே,
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சமூக பணிகளில் மதிப்பு மேம்படும். பேச்சுக்களில் இனிமை உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே,
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். சவாலான பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி நிறைந்த நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே,
குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உலகியல் வாழ்க்கை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில உதவி கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.