ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, காந்தி பிறந்த நாளை இந்திய அரசு காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வருகிறது. அந்த அடிப்படையில் இன்று மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் 153வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. காந்தி அக்டோபர் 2, 1869 அன்று குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார்காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்தது மட்டுமல்லாமல், சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் போராடினார். அதுமட்டுமல்லாமல் இந்திய சாதி அமைப்புக்கு எதிராக போராடினார் மற்றும் தீண்டத்தகாதவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதை ஒழிக்க பாடுபட்டார். சமுதாயத்தில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டவும் போராடினார். காந்தியை நினைவு கூறும் வகையில் அவர் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
காந்தி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் :
- 1930 ஆம் ஆண்டில், டைம் பத்திரிக்கையின் ஆண்டின் சிறந்த மனிதராக மகாத்மா காந்தி இருந்தார்.
- மகாத்மா காந்தி பிரிட்டர் அரசை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடியவர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அதே நாடு அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைக் கௌரவிக்கும் தபால்தலையை வெளியிட்டது.
- காந்தி ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் - 1937, 1938, 1939, 1947, இறுதியாக, அவர் ஜனவரி 1948 இல் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு வழங்கப்படவில்லை. இதற்கு நோபல் பரிசு குழுமம் வருத்தம் தெரிவித்திருந்தது.
- நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்று காந்தி நம்பினார், ஒவ்வொரு நாளும் சுமார் 18 கி.மீ. வரை அவர் நடப்பாராம்.
- காந்தி உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து பல புத்தகங்களை எழுதினார் மற்றும் சுபாஷ் சந்திர போஸுக்கு டயட் சார்ட் போட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
- இந்தியா மட்டுமல்ல 4 கண்டங்கள் மற்றும் 12 நாடுகளில் சிவில் உரிமைகள் இயக்கத்திற்கும் அவர் பொறுப்பேற்றார்.
- அவர் ஆங்கிலத்தை ஐரிஷ் உச்சரிப்புடன் பேசுவார், ஏனென்றால் அவரது முதல் ஆசிரியர்களில் ஒருவர் ஒரு ஐரிஷ் மனிதர்.
- அவர் ஒரு பெரிய கால்பந்து ரசிகராக இருந்தார், அவர் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த காலத்தில், மூன்று கால்பந்து கிளப்புகளை உருவாக்கினார் - அவை டர்பன், பிரிட்டோரியா மற்றும் ஜோகன்னஸ்
- காந்தி 1882 இல் தனது 14 வயது கஸ்தூரிபாவை மணந்தபோது அவருக்கு வயது 13. அவர்களின் முதல் குழந்தையின் மரணம் அவரை குழந்தை திருமணத்திற்கு வலுவான எதிர்ப்பாளராக மாற்றியது.
- உலகம் முழுவதும் இன்றும் அகிம்சையை விரும்பும் நபர்களுக்கு காந்தி முன்னோடியாகத்தன் இருக்கிறார். அவர்கள்களுள் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மகாத்மா காந்தியின் ரசிகர். அதனால் தான் அவர் வட்ட கண்ணாடிகளை அணிகிறார் என்றும் கூறப்படுகிறது.
- காந்தி ஒருமுறை ஜெர்மென் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு கடிதம் எழுதினார், அந்த கடிதத்தின் தொடக்கத்தில் 'அன்புள்ள நண்பரே' என்று அழைத்தார், போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஹிட்லர் பதிலளிக்கவில்லை.
- லியோ டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் மற்றும் ஹிட்லர் என அவரது காலத்தின் பல முக்கிய நபர்களுடன் காந்தி அந்த சமயத்தில் தொடர்புக்கொண்டார்.
- காந்தி சுடப்பட்டபோது அவர் அணிந்திருந்த உடைகள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
- காந்தியின் இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டதாகவும் அது 8 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.