குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய பணி. மிகவும் கவனமாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டியது. குழந்தை வளர்ப்பில் தாய். தந்தை இருவருக்குமே பொறுப்பு உண்டு. குழந்தையின் உடல் நலத்தைப் பேணும் பொறுப்பு முழுக்க முழுக்க பெற்றோரைச் சார்ந்தது. குழந்தை ஆரோக்கியமானதை சாப்பிட விரும்பாது அதன் வாய்க்கு எது ருசியாக இருக்கிறதோ அதைத் தான் சாப்பிட விரும்பும். அதுமட்டுமல்லாமல் தட்டில் போட்டுத்தரும் உணவைக் காட்டிலும் வண்ணமயமான கண்களை ஈர்க்கும் படங்களுடன் திறந்தவுடன் மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் மொறுமொறுவென்றோ அல்லது தித்திப்பாகவோ இருக்கும் உணவு தான் அவர்களின் சாய்ஸாக இருக்கும்.


அதுமட்டுமல்ல, தங்களின் ஃபேவரைட் ஹீரோ, விளையாட்டு வீரர்கள் எண்டார்ஸ் செய்யும் உணவுப் பொருள் என்றால் போதும் அது ருசியாக இல்லாவிட்டாலும் கூட பிடிவாதமாக சாப்பிடுவார்கள்.
இப்படி நம் குழந்தைகள் புசிக்கும் உணவுகளில் 4 பானங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எக்காரணம் கொண்டும் அதை உங்கள் குழந்தைகள் புசிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


1. கஃபைன் உள்ள பானங்கள்:


அதிகளவில் கஃபைன் உள்ள பானங்களை உங்கள் குழந்தைகளின் கண்ணில் காட்டிவிடாதீர்கள். கஃபைன் செறிவூட்டப்பட்ட காஃபி, ஹாட் சாக்கலேட், எனர்ஜி ட்ரிங்ஸ் ஆகியன உங்கள் குழந்தைகளுக்கு பழக்கமாகலாம். இதனால் மனப்பதற்றம், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, தலைவலி போன்ற நோய்கள் வரலாம்.


2.எனர்ஜி / ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ்:


கிரவுண்டில் ஒரு ரவுண்ட் சுற்றி வந்தால் கூட எனர்ஜி / ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் அருந்துவது ஃபேஷனாகிவிட்டது. அவற்றில் அதிகளவிலான சர்க்கரை உள்ளது. இதனால் உங்கள் குழந்தைகளுக்கு உடல்பருமன் ஏற்படலாம். அதற்கு பதிலாக பால், சத்துமாவு கஞ்சி போன்றவற்றை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.




3.ஏரேட்டட் பானம் வேண்டாமே:
ஏரேட்டட், கார்பனேட்டட் குளிர்பானங்களில், சராசரியாக ஒரு கேனில் எட்டு டீஸ்பூன் சர்க்கரை நிறைந்துள்ளது. ஒருவர், ஒரு ஏரேட்டட் பானம் குடித்தாலே அவருக்கு எட்டு டீஸ்பூன் சர்க்கரை கிடைத்துவிடும். ஏரேட்ட பானங்களில் செயற்கை நிறமூட்டிகள், அதிக கொழுப்பு, பதப்படுத்தும் கூறுகள் இருக்கும். இவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். பற்களில் கேவிட்டீஸ் ஏற்படுத்தும். ஏன் இதய நோய்களையும் வரவழைக்கும். ஏரேட்டட் பானங்கள் குழந்தைகளின் எலும்பில் உள்ள கால்சியத்தை அரித்துவிடும். இதனால் சிறு வயதிலேயே அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும்.


4. குளிர் பானங்கள்:
குளிர்பானங்களை உங்கள் குழந்தைகள் விரும்புவார்கள். குளிர்பானங்களால் பல் சிதைவு, உடல் பருமன் ஏற்படும். அதனால் குழந்தைகளுக்கு இந்த குளிர் பானங்களைக் கொடுக்காதீர்கள்.


இவை மட்டுமல்ல சிப்ஸ், பீட்சா, பர்கர், பரோட்ட என நிறைய உணவு வகைகள் குழந்தைகளின் விருப்பமாக இருந்தாலும் கூட அவற்றை அவர்களிடமிருந்து விலக்கி வையுங்கள்.


உணவே மருந்து என்பதை நாம் அறிந்து நடந்தால் நம் பிள்ளைகள் நம் வழியில் பின்பற்றி நடப்பார்கள்.