சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் அனைவருக்கும் ஜூன் மாத செமஸ்டர் தேர்வு வரும் செப்டம்பர் 3-ம் தேதி தொடங்க உள்ளது.


சென்னைப்  பல்கலைக்கழகத்தில் என்னென்ன சிறப்பு அம்சங்கள்?


ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 


அந்த வகையில் கடந்த 2021- 22ஆம் கல்வி ஆண்டில், 340 ஏழை மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து, இலவசமாக இளங்கலைப் படிப்புகளைப் படித்து வருகின்றனர். 2022- 23ஆம் கல்வி ஆண்டில் இலவச இளங்கலைப் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.  


மேலும் வாசிக்க- TN TRB Recruitment 2022: 1.80 லட்சம் வரை ஊதியம்; எஸ்சிஇஆர்டி விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்


இந்த ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் 131 இணைப்புக் கல்லூரிகளிலும், 3-ம் பாலினத்தவருக்கு இலவச சேர்க்கையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் அனைவருக்கும் ஜூன் மாத செமஸ்டர் தேர்வு வரும் செப்டம்பர் 3-ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தத் தேர்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நடைபெற உள்ளன.


தேர்வின்போது ஹால் டிக்கெட் மற்றும் INSTITUTE OF DISTANCE EDUCATION வழங்கிய அடையாள அட்டை அவசியம். வேறு எந்த அடையாள அட்டையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


செல் போன்கள், ஐ-பாடுகள் ஆகியவை தேர்வு மையங்களுக்குள் அனுமதி இல்லை உள்ளிட்ட தகவல்களை சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 


இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வுக் கால முழு அட்டவணையைக் காண: https://exam.unom.ac.in/idedata/idetimetable.asp


தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகளுக்காக மண்டல வாரியாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை எங்கெங்கு உள்ளன என்பதைக் காண: https://exam.unom.ac.in/idedata/centernote.asp


தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


மேலும் வாசிக்க: TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி