குளிர்காலம், கோடைகாலம் இரண்டிலும் சருமத்திற்கு அதிக கவனம் தேவைப்படும். கோடை வெயிலின் தாக்கம் உடல்நலனின் மட்டுமல்ல சருமத்தையும் பாதிக்கும். சரும வெடிப்பு, வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படும். வெயில் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிப்பது உடலுக்கு நல்லது என்பதோடு சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்திற்கென தனியாக சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க biotin, வைட்டமின் பி காம்ளக்ஸ் உள்ளிட்டவைகள் முக்கியமாகும். இதற்கேற்றவாறு உணவுகளை எடுத்துகொள்வது சிறந்தது. சந்தைகளில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் முழுமையாக இயற்கையானது அல்ல. அதனால், உணவு முறைகளில் தேவையாக ஊட்டச்சத்துகளை எடுத்துகொள்வது சிறந்தது.
வைட்டமின் பி7 ஏன் அவசியம்?
சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி7 மிகவும் என்கிறார் சரும் பராமரிப்பு மருத்துவர் கீதா மிட்டல். இது சருமத்தில் புதிதாக உருவாகும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்கிறார். வைட்டமின் பி7 அதிகமுள்ள உணவுகளை இங்கே காணலாம்.
பாதாம்
பாதாமில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. தினமும் 3-4 பாதாம்களை இரவில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காலையில் அதன் தோலை உறித்து சாப்பிடும் போது உங்களுக்கு அன்றைக்கு தேவையான உடனடி ஆற்றலை நீங்கள் காலை முதலே பெற்றுக்கொள்ளலாம். இதோடு மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் டயட் என்கிற பேரில் காலை உணவாக ஓட்ஸ், ப்ரூட் ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுகின்றனர்.
எனவே, அப்போது அதனுடன் பாதாம் பருப்பினையும் சேர்த்து உட்கொள்ளலாம். மேலும் உலர் திராட்சை, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள் நீங்கள் திண்பண்டங்களாக சாப்பிடும் பொழுது பாதாம் பருப்பையும் மக்கள் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதோடு குழந்தைகளுக்கு வீட்டிலேயே குக்கீஸ்கள், லட்டுகள், பாயசம் போன்றவை செய்துக்கொடுக்கும்போது பாதாமினை அதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
முட்டை
முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒரு கடினமாக வேகவைத்த முட்டையில் சுமார் 0.6 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது. இது உங்களின் தினசரி கொடுப்பணவில் 25 சதவிகிதம் ஆகும். மஞ்சள் கரு கொழுப்பை அதிகரிப்பதால் உடலுக்கு நல்லதல்ல என்று பலர் கூறினாலும், வைட்டமின் பி12 குறைபாட்டைத் தவிர்க்க முழு முட்டையையும் சாப்பிட வேண்டும். இதுவும் சரும பராமரிப்பிற்கு உகந்தது.
சர்க்கரைவள்ளி கிழங்கு
வைட்டமின் ஏ, பி12 நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து வர சரும ஆரோக்கியம் மேம்படும். இன்று பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் வைட்டமின் ஏ அல்லது ரெட்டினால் சேர்க்கப்படுகின்றன. இது இளமையான, பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது.
ஓமேகா-3
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், சால்மன் மற்றும் பிற கொழுப்பு மீன்களில் ஏராளமாக உள்ளன. சால்மன் மீனில் பயோட்டின் அதிகமாக உள்ளது. சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. சால்மன் சாப்பிடுவது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கற்றாழையும் சரும் பரமாரிப்பும்
கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்டரைசர். இதன் காரணமாகவே அழகுசாதன பொருட்களில் அதிகளவில் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. சன் ஸ்கிரீன், லோசன் உள்ளிட்டவைகளில் கற்றாழை பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. சரும பராமரிப்பில் கற்றாழையில் முக்கியத்துவம் வாய்ந்தது. சருமத்தை ஈரப்பத்தத்துடன் வைத்துகொள்ள உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. சிலருக்கு கற்றாழை அலர்ஜி தரக்கூடியது என்பதால் தேவையெனில் மருத்துவரை அணுகுவது நல்லது.
கோடையில் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சூரிய கதிர்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு கற்றாழை பயன்படும். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள தண்ணீர் சத்து சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.