விளையாட்டு உலகில் அதிகமாக பணம் சம்பாதிக்கும் வீரர்களாக சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் இடம்பிடித்து வருகின்றனர். கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட வீரர்களின் அளவிற்கு இல்லாமல் இருந்தால் கூட இவர்களுடைய வருமானமும் சற்று கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்விளைவாக தற்போது கிரிக்கெட் வீரர்களும் பல சொகுசு பங்களாக்களை தங்கள் வசம் வைத்துள்ளனர். அந்தவகையில் கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் சொகுசு பங்களாக்கள்  என்னென்ன? அவை எப்படி இருக்கும்?


விராட் கோலி :




இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி இவர் தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு டெல்லியில் ஒரு வீடு உள்ளது. அதாவது குருகிராம் பகுதியில் உள்ள டிஎல்.எஃப் சிட்டி பகுதியில் 80 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சிறப்பான வில்லா உள்ளது. இதில் நீச்சல் குளம், ஜிம், கிரிக்கெட் பயிற்சி செய்யும் இடம் ஆகிய அனைத்தும் உள்ளது. 




ரோகித் சர்மா:




இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ரோகித் சர்மா மும்பையைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியிலுள்ள அஹூஜா டவர்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் வசித்து வருகிறார். இந்தப் பகுதியில் பல சொகுசு வீடுகள் அமைந்திருக்கும். அப்பகுதியில் தான் ரோகித் சர்மாவும் வசித்து வருகிறார். இங்கு அவரது வீடு 29ஆவது தளத்தில் உள்ளது. அது மிகவும் பெரிய அளவில் இருக்கும். வீட்டுடன் சேர்ந்து அவரது அலுவலக பணிகளுக்கும் ஏற்ற வகையில் இடமும் உள்ளது. 




ஷேன் வார்ன்:




ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். இவர் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். அங்கு 5.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் ஒரு வீடு ஒன்றை வைத்துள்ளார். இங்கு 5 படுக்கை அறைகள்,நீச்சல் குளம், தியேட்டர், பார், அடித்தளத்தில் கார்களை நிறுத்த ஒரு பிரத்யேக இடம் ஆகியவை அமைந்துள்ளன.




கேவின் பீட்டர்சன்:




இங்கிலாந்து அணியின் அதிரடி வீரராக வலம் வந்தவர் கேவின் பீட்டர்சன். இவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும் இங்கிலாந்து குடிபெயர்ந்து அங்கு கிரிக்கெட் விளையாடினார். இவர் இங்கிலாந்தில் உள்ள சர்ரே பகுதியில் வெண்ட்வோர் எஸ்டேட் என்ற இடத்தில் ஒரு வீடு வைத்துள்ளார். இதன் மதிப்பு 25 மில்லியன் பிரட்டன் பவுண்ட் ஆக உள்ளது. இதில் நீச்சல் குளம், சினிமா தியேட்டர், ஒரு பூங்கா போன்ற இடம், கிரிக்கெட் விளையாட இடம் என அனைத்தும் உள்ளது. 




மகேந்திர சிங் தோனி:




இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ராஞ்சியில் தன்னுடைய மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஸிவாவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டில் அவருடைய வீட்டில் பைக், குதிரை,நாய் உள்ளிட்டவை தங்க இடம், நீச்சல் குளம், ஒரு பெரிய உணவு அருந்தும் இடம் எனப் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 




சுனில் கவாஸ்கர்:




இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர். இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் கோவாவில் ஒரு சொகுசு பங்களாவை வைத்துள்ளார். இஸ்பரவா வில்லா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த வில்லாவில் பெரிய அறைகள், ஒரு பெரிய தோட்டம் மற்றும் கோவாவின் இயற்கை எழில் சூழலை ரசிக்கும் வகையில் நீச்சல் குளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 




ரவீந்திர ஜடேஜா:




இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஜடேஜா. இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஜாம்நகரில் 6 படுக்கை அறைகள் கொண்ட வீடு ஒன்றை வைத்துள்ளார். இந்த வீட்டிற்கு தன்னுடைய தாய் ஶ்ரீலதாவின் பெயரை அவர் வைத்துள்ளார். இந்த வீடு வெளியே இருந்த பார்க்க ஒரு சிறிய மைதானம் போல் காட்சி அளிக்கும். அந்த அளவிற்கு இதில் வசதிகள் இருக்கும். 


 


கிறிஸ் கெய்ல்:




வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது வரை கலக்கி வரும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். இவர் ஜமைக்கா பகுதியில் மிகப் பெரிய ஆடம்பர சொகுசு பங்களாவை வைத்துள்ளார். 3 அடுக்கு கொண்ட அந்த வீட்டில் நீச்சல் குளம், பார்டி நடத்த இடம், பார், தியேட்டர் என அனைத்தும் உள்ளது. இவருடைய வீட்டில் இருந்து பார்த்தால் கரீபிய தீவுகள் அவ்வளவு அழகாக தெரியும் வகையில் அமைந்திருக்கும். 




சவுரவ் கங்குலி:




இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார். இவர் கொல்கத்தாவில் ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் கிரிக்கெட்டில் விளையாடில் இறங்கும் முன்பே இவருடைய வீடு மிகவும் பெரியது. அந்த வீட்டில் கிட்டதட்ட 48 அறைகள் உள்ளன. 4 அடுக்காக இருக்கும் இந்த வீட்டில் ஒரு கிரிக்கெட் பிட்ச் கூட உள்ளது. இந்த வீட்டில் மொத்தமாக 50 பேர் வரை தங்கும் வகையில் இடம் உள்ளது. 




மேலும் படிக்க: 9 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: பளுதூக்குதல் பிரிவில் சாதிப்பாரா சானு?