பல உணவுகள் வயிறு வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும், குறிப்பாக உணவு சகிப்புத்தன்மை அல்லது அது தொடர்பான சென்ஸிட்டிவிட்டி உள்ளவர்களுக்கு அது பிரச்னையாக அமையும். உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வது அதன் அறிகுறிகளை தவிர்க்க உதவுகிறது.
உங்கள் உணவை மிக விரைவாக சாப்பிடுவது போன்ற பல காரணிகள் இந்த நிலைக்கு வழிவகுக்கும்.
சில உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால், உங்கள் வயிற்றை இறுக்கமாக்கும் அதிகப்படியான வாயுவை அது உற்பத்தி செய்கிறது. நமது சிறுகுடலால் கார்போஹைட்ரேட்டுகளை முழுமையாக உறிஞ்ச முடியாது.மேலும் இந்த செரிக்கப்படாத கார்போஹைட்ரேட்டுகள் சேர்ந்து, அதிகப்படியான வாயு மற்றும் திரவத்தை இழுத்து, வயிறு வீக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிலரால் ஜீரணிக்க முடியாத மற்றொரு மூலக்கூறு க்ளூடென், மேலும், பீன்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளும் அதிகப்படியான வாயுவை உண்டாக்குகின்றன. இதுபோன்ற வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும் இன்னபிற உணவுகளைப் பார்க்கலாம்...
பீன்ஸ்: பீன்ஸ் ஒரு வகை பருப்பு. அவற்றில் அதிக அளவு புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. பீன்ஸ் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் நார்ச்சத்து நிறைந்தது. அவற்றில் பெரும்பாலானவை கேலக்டோசைடுகள் எனப்படும் சர்க்கரைகளைக் கொண்டிருக்கின்றன, அவை கார்போஹைட்ரேட் குழுவின் ஒரு பகுதியாகும். புளிக்கக்கூடிய ஒலிகோ-, டி-, மோனோ-சாக்கரைடுகள் மற்றும் பாலியோல்கள் ஆகியவற்றின் குறுகிய சங்கிலி கார்போஹைட்ரேட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை செரிமானத்திலிருந்து தப்பித்து, பெருங்குடலில் உள்ள குடல் பாக்டீரியாவால் நொதிக்கப்படுகின்றன. அந்த நொதியில் இருந்து வாயு உற்பத்தி ஆகிறது. அது வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
குளிர் பானங்கள்: சோடாக்கள் உட்பட குளிர் பானங்கள், குமிழ்களை உருவாக்க உதவும் கார்பன் டை ஆக்சைடு வாயுவைக் கொண்டுள்ளது. இந்த வாயு நேரடியாக செரிமான மண்டலத்திற்கு செல்கிறது, அங்கு அது வீக்கத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய பானங்களின் அதிகப்படியான நுகர்வு பிற உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
ஆப்பிள்கள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, மேலும் இதில் பிரக்டோஸ் மற்றும் சர்பிடால் சர்க்கரைகளும் உள்ளன. இதனால் உற்பத்தி செய்யப்படும் வாயு வயிறு வீங்கிய உணர்வுக்கு வழிவகுக்கிறது. அதே சமயம் ஆப்பிள்கள் ஒரு சிறந்த சிற்றுண்டி, எனவே நீங்கள் அவற்றை முழுவதுமாக கைவிடக்கூடாது.
மசூர் பருப்பு: மசூர் பருப்பு சத்தான கூறுகள் நிறைந்த உணவுப் பொருளாகும். போதுமான அளவு கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் இதில் உள்ளன, ஆனால் அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக, சிலருக்கு வாயு ஏற்படலாம்.
ப்ரோக்கோலி: காலிஃபிளவர், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் மிகவும் சத்தானவை மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பீன்ஸ் போன்ற காய்களின் தன்மைகள் இருப்பதால், அவை சிலருக்கு வீக்கத்தை ஏற்படுத்தலாம்