மைக்ரோவேவ் அவன் பயன்படுத்துவது இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகிவிட்டது. உணவைச் சமைப்பதற்கும், பேக்கிங் செய்வதற்கும், சூடாக்குவதற்கும் மைக்ரோவேவ்களைப் பயன்படுத்துகிறோம். அதன் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, அடுப்பு மேல் க்ரீஸ் தன்மை ஒட்டிக்கொள்கிறது மற்றும் அழுக்கு ஏற்படுகிறது. மைக்ரோவேவ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை சுத்தம் செய்ய சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இருப்பினும், மக்கள் வீட்டில் மற்ற எந்தப் பொருளையும் சுத்தம் செய்வது போலதான் இதனையும் சுத்தம் செய்கிறார்கள்,அது தவறு. மைக்ரோவேவை சுத்தம் செய்யும்போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம். 


சுத்தமான துணியால் அடுப்பை துடைக்கவும்


அடுப்பைச் சுத்தம் செய்ய சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்தலாம். முதலில் காகிதம் அல்லது துணியை சுருட்டி மைக்ரோவேவில் வைக்கவும். பிறகு அதை 1 முதல் 2 நிமிடங்கள் வரை ஆன் செய்து வைக்கவும்.. இதற்குப் பிறகு, மைக்ரோவேவை அதே காகிதம் அல்லது துணியால் துடைக்கவும். இது மைக்ரோவேவை எளிதாக சுத்தம் செய்யும்.


பேக்கிங் சோடா பயன்படுத்தவும்


மைக்ரோவேவில் உள்ள கறைகளை நீக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்ய வேண்டும். பிறகு அந்த பேஸ்ட்டை அடுப்பில் உள்ள கறைகளில் தடவி 5 முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஈரமான காகிதம் அல்லது துணியால் அடுப்பை சுத்தம் செய்யவும். இது மைக்ரோவேவில் உள்ள கறைகளை உடனடியாக நீக்கிவிடும்.


 எலுமிச்சை அல்லது வினிகர் பயன்படுத்தவும்


மைக்ரோவேவை சுத்தம் செய்ய வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் மைக்ரோவேவில் வெள்ளை வினிகரை நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். முதலில், துணியில் வினிகரை ஊற்றவும், பின்னர் அதே துணியால் மைக்ரோவேவை சுத்தம் செய்யவும்.


ஆரஞ்சு துண்டுகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தவும்


சில ஆரஞ்சு துண்டுகளை எடுத்து அதிலிருந்து சாற்றை பிழியவும். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அந்தக் கலவையை மைக்ரோவேவ் கிண்ணத்தில் ஊற்றவும். அல்லது, ஆப்பிள் சைடர் வினிகர் இருந்தால், அதில் சிறிதளவு எடுத்து மைக்ரோவேவ் கிண்ணத்தில் ஒரு கப் தண்ணீரில் கரைக்கவும். பிறகு ​​அந்த கிண்ணத்தை மைக்ரோவேவில் வைத்து, கலவை கொதித்து வர மைக்ரோவேவ் கண்ணாடிகளில் நீர் படியும் வரை சில நிமிடங்கள் அதை இயக்கவும். இந்தக் கலவை குளிர்ந்த பிறகு கதவைத் திறக்கவும். பின்னர் கிண்ணத்தை அகற்றி உள்ளே துணி வைத்து சுத்தம் செய்யவும்.


இவற்றை செய்வதற்கு முன்பு மைக்ரோவேவ் அவனை ஆஃப் செய்ய மறக்க வேண்டாம்