ஆரஞ்சுப் பழத்தின் தோலை 3லிருந்து 4 நாட்கள் வரை காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தோலை குட்டி குட்டியாக பிய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை சலித்துக் கொள்ள வேண்டும். சலித்த பின் பவுடரையும் சற்று பெரிய துகளையும் தனித்தனியே வைத்துக் கொள்ள வேண்டும். பவுடராக உள்ள ஆரஞ்சுப் பொடியில் இரண்டு ஸ்பூனை எடுத்து ஒரு பெளலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 3 ஸ்பூன் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை பேஸ்ட் போல் நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் அல்லது 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நீங்கள் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் சருமம் பளபளப்பாகவும் ப்ரைட்டாகவும் இருக்கும். ஆரஞ்சு தோலில்,  வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும். பொடியில் சலித்தெடுத்த சற்று பெரிய ஆரஞ்சு துகள்களை குளிக்கும் போது உடலில் தேய்த்து குளிக்க பயன்படுத்தலாம்.


ஆரஞ்சுப் பழத் தோல் சருமத்திற்கு சிறந்தது என்றாலும் அதை காயவைத்து அரைத்துப் பயன்படுத்துவதற்கு சிலருக்கு நேரம் இருக்காது. அப்படிப்பட்டவர்களும் பயன்படுத்தும் வகையிலான ஒரு சிறந்த டிப்ஸை பார்க்கலாம். பாதி ஆரஞ்சுப் பழத்தின் தோலை எடுத்து குட்டிக் குட்டியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 50ஆலில் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். இதில் ஒன்றரை ஸ்பூன் அரைத்த ஆரஞ்சுப் பழத்தோலை சேர்த்து இரண்டு நிமிங்கள் கொதிக்க விடவும். இப்போது எண்ணெயின் நிறம் சற்று ஆரஞ்சு நிறத்திற்கு மாறி இருக்கும். இப்போது கடாயை அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தினமும் இரவில் இந்த எண்ணெய்யை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். 15 நிமிடத்திற்கு பின் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் சருமம் பளபளப்பாகவும் அழகாகவும் மாறி விடும். இது உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். 


மேலும் படிக்க 


Cucumber Corn Salad: ஸ்நாக் சாப்பிடனும் ஆரோக்கியமாகவும் இருக்கனுமா? இதோ சாலட் ரெசிபி!


Kitchen Hacks : இனி கிச்சனிலேயே ரொம்ப நேரம் செலவிட வேணாம்.. இதோ டிப்ஸ்..