ஒவ்வொரு மாதமும் வரும் மாதவிடாய் சுழற்சி, அதனுடன் சேர்ந்து வரும் வலி, ஒரு 2-4 நாட்களுக்கு வலி, வயிறு உப்புசம், தசை பிடிப்பு, அடிவயிறு வலி, முதுகு வலி, இடுப்பு வலி என பல்வேறு  பிரச்சனைகளை தருகிறது. இதில் இருந்து மீண்டு வர இயற்கையாக சில உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இது வலியை குறைத்து, ரிலாக்ஸாக வைக்க உதவும்.



  • தண்ணீர் - மாதவிடாய் நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். சீரக தண்ணீர், வெந்தய தண்ணீர் என எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இது வழிகளை குறைத்து , தசை பிடிப்பு, மனக்குழப்பம் ஆகியவற்றை குறைக்கும். தண்ணீர் தான் முதல் உணவாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் வரும் சோர்வு நீங்கி, சாதாரணமாக வைக்க உதவும்.





  • இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகள் - பேரீச்சம் பழம், அத்தி பழம், மாதுளை பழம், ஸ்பினாச் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது இரத்த போக்கினால் வரும் உடல் சோர்வில் இருந்து மீண்டு வர உதவும். இரத்த போக்கு அதிக மாக இருந்தால் உடல் சோர்வு, துவண்டு போதல், இரத்த போக்குடன் வரும் வலி என தொந்தரவாக இருக்கும். இதில் இருந்து மீண்டு வர இரும்பு சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.





  • காய்கள் - உணவில் பச்சை காய்களை சேர்த்து கொள்ளுங்கள். இது சோர்வு மற்றும் வலியில் இருந்து மீண்டு வர உதவியாக இருக்கும். வேகவைத்தோ, ஆவியில் சமைத்தோ காய்களை எடுத்து கொள்வது சிறந்த பலனளிக்கும்.





  • இனிப்புகள் - இந்த நேரத்தில் இனிப்பு சுவை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்பது போன்று தோன்றும். அதனால் பேரீச்சம் பழம் மற்றும் உலர்பழங்கள் நெய் சேர்த்து செய்த லட்டு எடுத்து கொள்ளலாம்.இது இனிப்பாகவும் இருக்கும், மேலும் ஊட்டச்சத்து ஆனதாகவும் இருக்கும்.





  • டீ - இஞ்சி டீ, எலுமிச்சை டீ, வெந்தய டீ, போன்றவற்றை வெதுவெதுப்பாக எடுத்து கொள்ளலாம். இது வலியில் இருந்து மீண்டு வர உதவியாக இருக்கும். இது வலி இருக்கும் நேரத்தில் எடுத்து கொள்ளும் போது இதமாகவும், வலிகுறைவாகவும் இருக்கும்.




உணவுகளை தவிர்க்காமல் கட்டாயம்  மூன்று வேலை உணவு எடுத்து கொள்ளுங்கள். இது உடல் சோர்வில் இருந்து மீண்டு வர உதவியாக இருக்கும்.




சோடா, சாக்லேட், செயற்கை இனிப்புகள், போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இது வலியை குறைக்காது. மேலும் உடலுக்கு நல்லது இல்லை.