இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் (Insulin resistance) சமீப காலங்களில் அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. இதை உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றின் உதவியோடு இதை சரி செய்யலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


காலை சாப்பிடும் உணவு முதல் உங்கள் டயட்டில் சேர்க்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இன்சுலின் அளவை சீராக இருக்க உதவும். காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் பற்றிய நிபுணர்களின் பரிந்துரைகளை காணலாம். 


ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தாவின் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பற்றி தெரிவிக்கையில், உணவில் இருந்து உறிஞ்சப்படும் குளுகோஸ் உடலில் உள்ள செல்கள், தசைகள், கல்லீரல்,கொழுப்பு ஆகியற்றுக்குள் செல்ல முடியாமல் இருப்பதே ; இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்.” என்கிறார். 


தாகம், பசி அதிகரிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தலைவலி, பார்வை மங்குதல், சரும தொற்று ஆகியவை இதன் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


இதை சரிசெய்ய காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய மூலிகை தண்ணீர் பரிந்துரைகள் பற்றி இங்கே காணலாம்.


வெந்தயம்:


இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் இருந்தால் வெந்தயம் தண்ணீர் சேர்த்து குடித்து வருவது உதவும். இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் இரவே ஊறவைத்து விட்டு, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அதை குடிப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். 


பட்டை டீ:


காலையில் பால் பயன்படுத்தி டீ, காஃபி குடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். அதற்கு பதிலான பட்டை டீ குடிப்பது நல்லது. தண்ணீரில் பட்டையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதோடு தேன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம்.


நட்ஸ்:


பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகிய நட்ஸ் வகைகளை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இன்சுலின் சீராக இருப்பதற்கு ஊற வைத்த நட்ஸ் சாப்பிடுவது உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


நெல்லிக்காய்:


நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இன்சுலின் சீராக இருக்கவும் உதவும்.வைட்டமின் சி, ஆன்டி- ஆக்ஸிடண்ட் ஆகியவை நிறைந்திருப்பதால் குளுகோஸ் மெட்டபாலிசம் சிறப்பாக இருப்பதற்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கவும் உதவும்.


கற்றாழை:


கற்றாழையில் ஏராளமான மருத்து குணங்கள் நிறைந்திருக்கின்றன. கற்றாழையை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்து இஞ்சி, புதினா சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து ஜூஸ் ஆக குடிக்கலாம். 


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.