நீண்ட நாட்களாக சைனஸ் அல்லது ஆஸ்துமா போன்ற ஏதேனும் சுவாச பிரச்சனைகளால் பாதிப்படுகிறீர்களா? மழை காலம், மற்றும் குளிர்காலம் தொடங்கிய இந்த நேரத்தில் உங்களுக்கு சுவாச பிரச்சனைகளும் எட்டி பார்க்க தொடங்கி இருக்கும். இது போன்ற பருவ நிலைக்கு ஏற்ற மாதிரி சுவாச பிரச்சனைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இதை சாப்பிட்டால் சளி பிடிக்கும், அதை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என பல உணவுகள் தவிர்த்து வருவோம். ஆனால் இந்த சுவாச பிரச்சனையில் இருந்து மீண்டு வர சில உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
தக்காளி - இதில் லைகோபீன் எனும் ஆண்டிஆக்ஸிடென்ட் நிறைந்து இருக்கிறது. இது காற்று பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைகிறது. குளிர் நாட்களில் காற்று பாதையில் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு வீக்கம் ஏற்படும். அவர்கள் உணவில் தக்காளி சேர்த்து கொள்வதால் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
கிரீன் டீ - இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால்,நுரையீரல் தசைகளை தளர்வாக வைப்பதற்கு உதவும். இருமல் வந்தால் நுரையீரல் தசைகள் இறுக்கமாகி விடும். தினம் இரண்டு வேலை கிரீன் டீ எடுத்து கொள்வது நல்லது.
அக்ரூட் பருப்புகள் - இது நுரையீரல் காற்று பைகள் முழுமையாக சுருங்கி விரிவதற்கு உதவும். அதனால் தினம் 5 பருப்புகள் எடுத்து கொள்வது நல்லது.
ஆப்ரிகாட்: இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருக்கிறது. இது நுரையீரல் தொற்று நோய்கள் வராமல் பரவாமல் இருக்க உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
பூண்டு - இதில் அல்லிசின் அதிகம் இருக்கிறது. இது நுரையீரலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் வராமல் பாதுகாக்கும். அதனால் தினம் உணவில் பூண்டு சேர்த்து கொள்ளுங்கள்
ப்ரோக்கோலி - இது அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இது, ஆண்டி பாக்டீரியல் தன்மை கொண்டுள்ளது. இதனால் நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
இஞ்சி - பொதுவாக இஞ்சி எடுத்து கொள்வது உடலின் அணைத்து உறுப்புகளும் நன்மை தரும். இதை தொடர்ந்து எடுத்து கொள்வதால், சளி, இருமல், போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம் மேலும், நீண்ட நாட்களாக ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு நுரையீரலில் சேர்ந்து இருக்கும் சளியைவெளியேற்ற இஞ்சி உதவும்.
முழு தானியங்கள் - முழு தானியங்கள் அன்றாட உணவில் சேர்த்து கொள்வது, உடல் வலுவாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும். மேலும் இது நுரையீரல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
பச்சை காய்கறிகள் - தினம் உணவில் பச்சை காய்கறிகள் எடுத்து கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் நிறைந்து இருக்கிறது. அதனால் நுரையீரல் பிரச்சனைககு சிறந்த தீர்வாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள் - ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.
பொதுவாக சளி பிரச்னை இருப்பவர்களுக்கு இதை எல்லாம் சாப்பிட கூடாது என்ற ஒரு கட்டு கதை இருக்கும். அனால் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவது, நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.