காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று நாம் அடிக்கடி கூறுகிறோம். ஆனாலும், நமது பிஸியான வாழ்க்கை முறையால் சில சமயங்களில் அதைத் தவிர்க்க வேண்டிய நிலை வருகிறது. உணவியல் நிபுணர் ருஜுதா திவேகர் காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார். அவரது தலைப்பில், "காலை உணவைத் தவிர்ப்பது ஒரு போதும் நல்ல யோசனையல்ல," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


மாணவர்களுக்கு காலை உணவு


இந்த பழக்கம் கவனம் மற்றும் கற்றல் குறைவதற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கி்றனர் ஊட்டச்சத்து வல்லுனர்கள். இது பள்ளியில் குழந்தைகளின் செயல்திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. குழந்தைகள் தினமும் காலை உணவை உண்ண வேண்டும். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இனி முதல் எல்லா நாளும் காலை உணவு கிடைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் இன்று விரிவு படுத்தியுள்ளார். 



காலை உணவு மாணவர்களுக்கு ஏன் அவசியம்


காலை உணவை உண்ணும் குழந்தைகள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. சாப்பிடாதவர்களை விட அதிகமாக கல்வியில் கவனம் செலுத்துகிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்குக் காரணம், நமது தசைகளைப் போலவே நமது மூளைக்கும் எரிபொருளுக்கான உணவு தேவைப்படுகிறது. நேற்று நாம் உண்ட உணவில் இருந்து நமது தசைகள் சேமிக்கப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்தினாலும், நமது மூளை நாம் சமீபத்தில் உண்ட உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலைத்தான் விரும்புகிறது. எனவே காலை உணவு மூளையை சீராக செயல்பட வைக்கும் அவசியமான விஷயம் ஆகும்.


தொடர்புடைய செய்திகள்: Chandrayaan 3 EXCLUSIVE: சந்திரயான் சரித்திர வெற்றி; என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சிறப்புப் பேட்டி!


மாணவர்களுக்கு மட்டும் காலை உணவு அவசியமா?


மாணவர்கள் மட்டுமல்ல, காலை உணவின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டால் நாம் யாருமே அதனை ஸ்கிப் செய்ய மாட்டோம். காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க அல்லது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறுக்குவழி என்ற கட்டுக்கதையையும் ருஜுதா திவேகர் சாடினார். காலை உணவைத் தவிர்ப்பது நல்ல யோசனையல்ல என்பதற்கான மூன்று வலுவான காரணங்களை உணவியல் அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக எல்லோருக்கும் காலை உணவு எவ்வாறு உதவுகிறது என்பதை பாருங்கள்:




  1. எடை இழப்புக்கு உதவுகிறது


உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவை தவிர்ப்பது எளிதாக இருக்கும் காரணத்தால் தவிர்க்கின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை வேளைகளில் கலோரி ஏற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை ஆராய்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. காலை உணவைத் தவிர்ப்பவர்களால், காலை உணவைத் தவறாமல் சாப்பிடுபவர்களைப் போல் திறம்பட உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.



  1. இரவு நேர உணவு ஏக்கத்தை கட்டுப்படுத்துகிறது


காலை உணவைத் தவிர்ப்பவர்கள் மனது, இரவில் பீட்சாக்கள் மற்றும் பாஸ்தா போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட தூண்டும். அதுபதிக கலோரிகளை உட்கொள்வதற்கு வழி வகுக்கும். மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் வழிவகுக்கும்.



  1. பசியால் வரும் கோபம் குறைகிறது


பசியால் வரும் கோபம் காலையில் சாப்பிடாத போது அதிகம் எழுகிறது. காலை உணவைத் தவிற்கும்பிது, இரத்தச் சர்க்கரை அளவு குறைவதால் எரிச்சல் மற்றும் அமைதியின்மை போன்ற உணர்வுகள் ஏற்படும். “காலை சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேறுபவர்கள், வெளியில் ஒவ்வொரு போரிலும் தோற்கிறார்கள் என்று கூறி ருஜுதா திவேகர் தனது வீடியோவை முடிக்கிறார்.