கிரீன் டீ மிகப் பிரபலமான ஒரு சுகாதார பானமாக உலகெங்கிலும் பரவியுள்ளது. இது உடல் ஆரோக்ய நன்மைகளுக்காக பெரும்பான்மையான மக்களால் உட்கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமான உடல் நலனை ஊக்குவிக்கும் இது, உடலுக்கு ஆக்ஸிஜனேற்றத்தை வழங்கும் சிறந்த பொருளாகும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஏராளமான தாவர கலவைகள் நிறைந்த இது, உலகின் ஆரோக்கியமான பானங்களில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. உங்கள் வழக்கமான உணவு முறையில் கிரீன் டீயைச் சேர்ப்பது, பல நன்மைகளை பயக்கின்றன. தினசரி உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளித்து உதவுவதோடு ஆரோக்கியமான உடலைப் பேனவும் உதவும்.
கிரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகள்
- நீரிழிவு
கிரீன் டீயின் முழு முதல் நன்மையாக அனைவரும் அறிந்து வைத்திருப்பது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்பதுதான். WebMD கூற்று படி, க்ரீன் டீ, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது டைப் 2 நீரிழிவு நோயைக் கொண்டவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்று கூறப்படுகிறது.
- ஆரோக்கியமான சருமம்
கிரீன் டீயில் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால், இது தோல் எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. தோலில் தடவி பயன்படுத்தும்போது தோல் வீக்கத்தைக் குறைப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
- அறிவாற்றலை மேம்படுத்துகிறது
கிரீன் டீயில் உள்ள பொருட்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி அறிவாற்றலை மேம்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
- எடை குறைப்பு
கிரீன் டீ என்பது உடல் எடையை குறைக்கும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். கிரீன் டீ உடல் கொழுப்பை உடைத்து, தொப்பை கொழுப்பை எரிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று உணவு சப்ளிமெண்ட்ஸின் தேசிய சுகாதார அலுவலகம் கூறுகிறது.
கிரீன் டீ குடிக்க சரியான நேரம் எது?
எந்த நல்ல உணவானாலும், சரியான நேரத்தில் அதனை உட்கொள்வது அவற்றின் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக அனுபவிக்க மிகவும் முக்கியமானது. என்ன சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதைத் திட்டமிடுவது சீரான உணவைப் பராமரிக்கவும் உடல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும். காபி மற்றும் பிற காஃபினேட்டட் பானங்களைப் போலல்லாமல், கிரீன் டீயில் அதிக அளவு எல்-தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது.
L-theanine மற்றும் காஃபின் மூளையின் செயல்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்துவதற்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ஒன்றாகச் செயல்படுகின்றன. எனவே, காலையில் வெறும் வயிற்றில், கிரீன் டீயை உட்கொள்வது, அந்த நாளைத் தொடங்குவதற்கும் அதன் நன்மைகளை அனுபவிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.