இந்தியா பல்வேறு கலாச்சாரம், மரபு மற்றும் உணவு பழக்க வழக்கங்களின் தொகுப்பு. ஆனால் முழு நாட்டுக்கும் பொதுவான அம்சங்களில் ஒன்றாக தேநீர் உள்ளது. தேநீர் என்பது அனைவருக்கும் பொதுவான காதல். காலை மாலை என காலநேரம் பார்க்காமல் அருந்தும் பானங்களில் ஒன்று தேநீர். தேநீருடன் சமோசா, போண்டா, வடை என தின்பண்டம் சேர்த்து உண்பது தேநீருக்குக் கூடுதல் சுவையூட்டும். ஆனால் இவை பெரும்பாலும் மைதா சேர்க்கப்பட்டது என்பதால் உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் மற்றோரு பக்கம் கலோரியை அதிகப்படுத்தும். மிகவும் இலகுவான, செய்ய எளிதான ஸ்நாக்ஸ்கள் சிலவற்றை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.


சோள பேல் பொரி






கொத்துமல்லி, புளி மற்று பச்சை மிளகாயை மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்,இதனுடன் தேவையான அளவு லெமன் சாறு, உப்பு, சேர்த்துக்கொள்ளவும்.சட்னி பதத்தில் இருக்கும் பேஸ்டை நீர்விட்டு கலந்து கொள்ளவும். மற்றொரு பக்கம் இரண்டு கப் வேகவைத்து கார்ன், வேகவைத்து உருளைக்கிழங்கு, சேவ், நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றைக் கலந்து அதனுடன் இந்த சட்னியைச் சேர்க்கவும். கார்ன் பேல் பொரி ரெடி. 


மாங்காய் சன்னா சாட்


கருப்புக் கடலையை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.இதனுடன் வெள்ளரிக்காய், துருவிய காரட் துண்டுகள்,தக்காளி, வெங்காயம் மற்றும் நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.  இதனுடன் கொத்துமல்லி சட்னி சேர்த்ததும் ஆம் சன்னா சாட் தயார். 


கார்ன்ப்ளாக்ஸ் சிவ்டா


சுவையூட்டப்படாத கார்ன், வறுத்த கடலை, முந்திரிபருப்பு, பாதாம், கருவேப்பிலை, உலர்ந்த திராட்சை, சாட் மசாலா, கரம் மசாலா,உப்பு ஆகியவற்றை வானலியில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஒன்றாகக் கலந்து பரிமாறவும். 


ராகி முறுக்கு


கைமுறுக்குக்கான அரிசி மாவுடன். கைப்பிடி அளவு ராகி மாவு சேர்த்து முறுக்கு சுடவும். தேநீருடனான பொருத்தமான உணவு இது. 


கத்திரிக்காய் சிப்ஸ்


கத்திரிக்காயில் எப்படி சிப்ஸ் என யோசனையாக உள்ளதா?. கத்திரிக்காயை மெல்லியதாக சீவிக்கொள்ளவும். சீவிய துண்டுகளுடன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசிறிக்கொள்ளவும். இதனை வாணலியில் வறுத்துக்கொள்ளலாம். சுவையான கத்திரிக்காய் சிப்ஸ் ரெடி.