தர்பூசணி நீர் சத்து நிறைந்த உணவுப்பொருள் என பரவலாக அறியப்படுகிறது, ஆனால் இந்த பழத்தை எல்லோரும் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா என்றால் 'நோ' சொல்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா?


காலை நேரத்தில் தண்ணீர், இளநீர், தர்பூசணி போன்றவற்றின் மூலம் உடலை நீரேற்றம் செய்துகொள்வது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது. இவை அந்த நாளுக்கு தேவையான ஆற்றலை உடலில் நிரப்புகிறது. பலருக்கும் அந்த நாளைத் தொடங்கும் போது, தர்பூசணி சாப்பிடுவது ஆரோக்கியமான தேர்வாக தோன்றுகிறது. 90% நீர், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழமான இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான வழிதான். ஆனால் வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது அனைவருக்கும் நல்லதா?



கார்டிசோலின் அளவை உயர்த்தும்


தர்பூசணி வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், எல்லோரும் இந்த பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர் அனுபமா மேனன் குறிப்பிடுகிறார். "காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணியை சாப்பிடுவது, பிரக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இது உடலில் உள்ள கார்டிசோலின் அளவை உயர்த்தக்கூடும். இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்," என்று மேனன் கூறுகிறார்.


தொடர்புடைய செய்திகள்: பீட்சாவில் பீஸ் குறைவாக இருந்ததால் அதிருப்தி.. ரூ.41.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்த அமெரிக்கர்!


வெறும் வயிற்றில் யார் தர்பூசணி சாப்பிடக்கூடாது?


"வெற்று வயிற்றில் தர்பூசணி பழங்களை உட்கொள்வது ஒவ்வொருவரின் உடல் வகை மற்றும் ஹார்மோன் செயல்பாட்டின் அடிப்படையில் மாறுபடும். சிலருக்கு பயனளிக்கலாம், சிலருக்கு பயனளிக்காமல் போகலாம். இன்சுலின் எதிர்ப்பு இருந்தால், காலை உணவில் பழங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் இது அறிகுறிகளை மோசமாக்கும்.


ஆனால் தர்பூசணி பழத்தை குறைந்த அளவில் சிற்றுண்டியாக வேறு எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். அது உடலுக்கு நல்லதுதான். உடலில் அதிகப்படியான லெப்டின் சுரப்பதால் உணர்திறன் குறைந்து, பிரக்டோஸ் சகிப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. அதனால் உடலில் அதிக கொழுப்பை உற்பத்தி செய்து அவை உடலில் தங்கி விடுகின்றன," என்கிறார் அனுபமா மேனன்.



வெறும் வயிற்றில் யார் தர்பூசணி சாப்பிட வேண்டும்?


"நல்ல ஆரோக்கியமான உடலை கொண்ட ஒரு நபர், காலை வேளையில் ஊட்டச்சத்துக்களை பெற இதனை சாப்பிடலாம். முழு பழமாக உட்கொள்ளும் போது பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், குளுக்கோஸ் மெதுவாக வெளியேற உதவுகிறது. எனவே, இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்பது போலவே, அந்த பழங்களைச் சாப்பிடுவதற்கான சரியான நேரத்த்தை தேர்ந்தெடுப்பது முக்கியமானது," என்று கூறுகிறார் அனுபமா மேனன்.