தென்னிந்திய உணவுகளில் கறிவேப்பிலை ஒரு முக்கிய அங்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சாம்பார், ரசம், பொரியல், கூட்டு உள்ளிட்ட  பல்வேறு வகையான சமையலுக்கு கறிவேப்பிலையை தாளிக்க பயன்படுத்துவோம். கறிவேப்பிலை இல்லாமல் பல சமையல்கள்  முழுமையடைவதில்லை எனலாம். 


தென்னிந்தியர்கள் மட்டும் அல்ல மற்ற மாநிலத்தவர்களும் கறிவேப்பிலையை பயன்படுத்தி சமைக்கின்றனர். உணவின் சுவை மற்றும் மனத்தை கூட்டுவதில் கறிவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது. கறிவேப்பிலையில்  ஏ, பி, சி மற்றும் பி12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இன்று, ஆரோக்கியமாக இருக்க அவற்றை எவ்வாறு நமது அன்றாட உணவில் சேர்ப்பது என்பதைப் பார்க்கலாம். 


1. பருப்பு தாளிப்பு.. 


தாளித்த பருப்பில் கரிவேப்பிலையை சேர்ப்பதன் மூலம் அதன் சுவையை அதிகரிக்க முடியும். தாளித்த பருப்பில் கறிவேப்பிலையை சேர்த்து மூடி வைப்பதன் மூலம் கறிவேப்பிலையின் மனத்தை முழுமையாக பருப்பு உறிஞ்சி கொள்ளும். இந்த தாளித்த பருப்பு கறிவேப்பிலையினால் மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.


2. சட்னி.. 


நாம் அனைவரும் புதினா, தக்காளி மற்றும் தேங்காய் சட்னி ஆகியவற்றை அடிக்கடி உண்பது வழக்கம். ஆனல் இந்த சட்னிகளுக்கு நிகரான சுவை கொண்ட கறிவேப்பிலை சட்னியை செய்ய பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவதில்லை. இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. இதை சட்னி அல்லது துவையலாக செய்து சாப்பிடலாம். 


3. காய்கறி வறுவல்..


நீங்கள் ஆரோக்கியமான உணவை விரும்பலாம். ஆனால் உங்கள் வறுத்த அல்லது வேகவைத்த காய்கறிகளை வழக்கமான அடிப்படையில் சாப்பிடுவது சலிப்பாக இருக்கும். இது போன்ற நேரத்தில், வறுத்த காய்கறிகளில் உங்கள்  உணவுகளில் கறிவேப்பிலை சேர்த்து சுவையாக மாற்றலாம். இது உணவின்  ஒட்டுமொத்த சுவையை மாற்ற உதவும்.


4. கறிவேப்பிலை தேநீர்: நீங்கள் தேநீர் பிரியர்களா? பிறகு ஏன் தாமதிக்கிறீர்கள்? கறிவேப்பிலை டீயை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு அற்புதமான பானமாகும்.  ஏனெனில் இந்த டீ செரிமானத்திற்கு உதவுகிறது.  உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. சாப்பிட்டத்தற்கு பின் அல்லது இரவில் தூங்குவதற்கு முன் கறிவேப்பிலை டீயை அறுந்தலாம். 


உடல் எடையை குறைக்க, நினைவாற்றலை மேம்படுத்த, ஹீமோகுளோபின் அளவை கூட்ட கறிவேப்பிலையை உண்ணலாம் என கூறப்படுகிறது.   நாம் பல்வேறு வகையான கெமிக்கல் கலந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் விரும்பி உண்ணுகிறோம். ஆனால் இயற்கையாக கிடைக்கும் கறிவேப்பிலை வரபிரசாதமாகும்.  தினசரி உணவுகளில் நாம் கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். எனவே உணவில் அளவாக கறிவேப்பிலை சேர்த்து அளவற்ற நன்மைகளை பெறலாம்.