தேவையான பொருட்கள்


தேங்காய் - அரை மூடி


நெய் - இரண்டு ஸ்பூன்


சேமியா - ஒரு கப்


சர்க்கரை - ஒரு கப்


உப்பு - ஒரு சிட்டிகை


புட் கலர் - ஒரு சிட்டிகை


ஏலக்காய் பொடி - சிறிதளவு


முந்திரி -5


செய்முறை


அரை மூடி தேங்காயை எடுத்து அதை கீற்றுகளாக எடுத்து அதன் கருப்பு நிற தோலை மட்டும் நீக்கி விட வேண்டும். பின் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 


அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், அதில் ஒரு கப் சேமியா சேர்த்து வறுத்து கொள்ளவும். சேமியா வறுபட்டதும் இதில் சேமியா அளந்த கப்பால் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். சேமியா வெந்ததும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, அல்லது வெல்லம் ஒரு கப் சேர்த்துக் கொள்ளவும். ஏலக்காய் பொடி சிறிதளவு, ஒரு சிட்டிகை புட் கலர் சேர்க்கவும். இப்போது சேமியாவில் தண்ணீர் வற்றி அல்வா பதம் வந்ததும் இதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 


இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய 5 முந்திரிகளை சேர்த்து வறுக்கவும். லேசாக வறுபட்டதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்று வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்க வேண்டும். தேங்காய் வறுபட்டதும் சர்க்கரை சேர்த்து வேக வைத்து வைத்துள்ள சேமியாவை இதில் சேர்க்க வேண்டும். இது நன்றாக ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு கிளறி விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சேமியா ஸ்வீட் தயார். 


மேலும் படிக்க 


Orange Ice Cream: கெமிக்கல் இல்லாத டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் க்ரீம்! வீட்டிலே செய்வது எப்படி?


Wheat Aappam: சாப்பாட்டு பிரியர்களே! மிருதுவான கோதுமை ஆப்பம்.. இப்படி செய்து அசத்துங்க!