தேவையான பொருட்கள்


3 உருளைக்கிழங்கு,2 கேரட், 4 to 5 பீன்ஸ், 1/2 கப் பச்சை பட்டாணி, 1 மீடியம் சைஸ் ஆனியன், 2 பச்சை மிளகாய், 1/2 கப் மைதா மாவு, 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், Bread Crumbs தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு,1/4 மேஜைக்கரண்டி மஞ்சள்த்தூள், 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா, மிளகாய்த்தூள் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தேவையான அளவு,மிளகுத்தூள் தேவையான அளவு, 8 to 10 முந்திரி


செய்முறை


முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கேரட், பீன்ஸ், வெங்காயம், ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொண்டு, பச்சை பட்டாணியையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.

 

இப்பொழுது ஒரு pan- ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும்.

 

வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா மற்றும் காரம் தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

 

இந்த கலவை சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் கால் கப் தண்ணீரை ஊற்றி காய்களை 3 நிமிடம் வரை வேக விடவும்.

 

2 அல்லது 3 நிமிடத்திற்கு பிறகு காய்கள் சிறிது வெந்ததும் அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். இந்த கலவை கட்லட் செய்யும் பாதத்திற்கு மாறி இருக்க வேண்டும்.

 

இந்த கலவை தண்ணியாக இருந்தால் அதில் சிறிது bread crumbs ஐ சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலவை சிறிது ஆறியவுடன் அதில் சிறிதளவு கொத்தமல்லி, மிளகுத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

 

இப்போது கட்லெட் pieces தயார் செய்வதற்கு தேவையான bread crumbs, மற்றும் அரை கப் மைதா மாவில் தண்ணீர் விட்டு கலக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.

 

இப்பொழுது தயாராக இருக்கும் கட்லெட்டுக்கான கலவையை, உங்களுக்குப் பிடித்தமான வட்ட வடிவிலோ அல்லது ஹார்டின் வடிவிலோ தட்டி அதை மைதா மாவில் முக்கி பின்னர் bread crumbs -ல் நன்கு இருபுறமும் புரட்டி போட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சுட்டதும் இந்த கட்லெட் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க வேண்டும். 

 

இப்பொழுது கட்லெட் துண்டுகளின் மீது சிறு பொரித்த முந்திரி துண்டுகளை வைக்க வேண்டும். வெஜ் கட்லெட் ரெடி. இதை கெட்சப் அல்லது சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.