சிலர் வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களாக இருப்பர். அவர்களுக்கு பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் சாப்பிட முடியாது இல்லையா. ஆனாலும் பனீர் சாப்பிட வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு டோஃபு இருக்கிறது. இதில் சுவையான டோஃபு உணவு வகைகளை காணலாம். 


டோஃபு பக்கோடா


தேவையான பொருட்கள்:


டோஃபு - 500 கிராம்


கடலை மாவு -1/4 கி.கி.


சீரகம் - ஒரு ஸ்பூன்


கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்


உப்பு -தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


டோஃபு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், கஸ்தூரி மேத்தி, உப்பு அனைத்தையும் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் பக்கோடா பொரித்தெடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நல்லா சூடானதும் டோஃபு துண்டுகளை கடலை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ருசியான டோஃபு பக்கோடா ரெடி.


கடாய் டோஃபு


தேவையான பொருட்கள்:



  • சோயா எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் (உங்கள் சாய்ஸ் எண்ணெய்)

  • இஞ்சி - பூண்டு விழுது - இரண்டு டேபிள் ஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

  • மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

  • தனியா - 1 டீஸ் ஸ்பூன்

  • மிளகாய் தூள் - 1 டீஸ் ஸ்பூன்

  • கரம் மசாலா - 1 டீஸ் ஸ்பூன்

  • கஸ்தூரி மேத்தி - 1 டீஸ் ஸ்பூன்

  • தக்காளி விழுது - அரை கப்

  • குடை மிளகாய் நறுக்கியது - ஒரு கப்

  • டோஃபு - ஒரு கப் (500 கிராம்)

  • சர்க்கரை - ஒரு சிட்டிகை

  • ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு


செய்முறை:



  • கடாயில், சோயா எண்ணெய் ஊற்றவும். பாத்திரம் நன்றாக சூடாகியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  • உடன். மஞ்சள் தூள், தனியா தூள, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வதங்கியதும் அதில் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும்.

  • பின்னர், அரைத்த தக்காளி விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும். இதோடு, குடை மிளகாய், டோஃபு, சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

  • கொத்தமல்லி இழை தூவி இறக்கவும். சூடான கடாய் டோஃபு ரெடி.


சில்லி கார்லிக் டோஃபு (Chilli Garlic Tofu)


தேவையான பொருட்கள்:



  • டோஃபு சிறிய துண்டுகளாக நறுக்கியது - 500 கிராம்

  • பச்சை மிளகாய் - 1

  • சிகப்பு மிளகாய் - 2

  • பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு முழு பூண்டு

  • இஞ்சி - அரை துண்டு பொடிதாக நறுக்கியது

  • சோயா சாஸ்

  • ரெட் சில்லி சாஸ்

  • உப்பு - தேவையான அளவு

  • காய்கறி - ஒரு கப் (உங்கள் சாய்ஸ்)

  • ஸ்பிரிங் ஆனியன் - 3 டேபிள் ஸ்பூன்

  • கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள் ஸ்பூன்

  • எண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்


செய்முறை:


சிவப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதோடு, உப்பு, ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.


இதனுடன் டோஃபு, காய்கறிகள் சேர்த்து கலக்கவும். ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து, கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து கொள்ளவும். 


அடுப்பில் கடாயில் எண்ணேய் ஊற்றி சூடு பண்ணவும். டோஃபு கலவையை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் வரை குக் செய்யவும். அவ்ளோதான் ரெடி. சுவைத்து சாப்டுங்க.