உடல் எடையை நிர்வகிக்க வேண்டும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் உணவு முறைகள், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். உணவுக் கட்டுப்பாடுகள் சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அதோடு,உணவுகளில் சிலவற்றை பின்பற்றினால் அவை உடல் எடை குறைக்கும் பயணத்திற்கு உதவும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


புரதம், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்:


உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற விசயத்தில் பொதுவாக கிடைக்கும் தகவல்கள் எல்லாருக்கும் உதவும் என்று சொல்லிவிட முடியாது. அப்படியானற்றில், வெதுவெதுப்பான நீர் உடல் எடையை குறைக்க உதவும் என்ற பரிந்துரைகளை கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக தொப்பையை குறைப்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கும். முறையான டய்ட், உடற்பயிற்சி பின்பற்ற வேண்டும். காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக சாப்பிட வேண்டும். தொப்பையில் உள்ள கொழுப்பு குறைய டயட்டை ஸ்ரிக்டாக பின்பற்ற வேண்டும்.






புரதம், நார்ச்சத்து நிறைந்த காலை உணவு உடல் எடை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. காலை உணவை சரியாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மன அழுத்தத்தை நிர்வகிப்பது, வாரத்திற்கு 150 நிமிடங்கள் ஏதாவது ஒரு வகையான உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூக்கம் - இவை அனைத்தையும் முறையாக செய்தால் தொப்பையை குறைப்பது கடினமாக இருக்காது. 


இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் ரிச்சா பரிந்துரைக்கும் சில வகையா ஹெர்பல் பரிந்துரைகள் குறித்து காணலாம்.


உடலின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால் அது உடல் எடையை குறைக்கும் பயணத்திற்கு உதவும். 


இஞ்சி:


இஞ்சியில் gingerol - என்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட் உடலின் வெப்ப உற்பத்திக்கு உதவுகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதற்கு உதவுகிறது. உணவில் இஞ்சி சேர்ப்பது, இஞ்சி துவையல் ஆகியவற்றோடு காலை எழுந்ததும் வெறும்வயிற்ற்சி இஞ்சி தண்ணீர் குடிக்கலாம். 


எலுமிச்சை:


எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி, வயிற்றில் அமிலம் சுரப்பை சீர்படுத்தும். இது உடல் எடையை குறைக்க உதவும். 


மஞ்சள்:


curcumin என்ற பொருள் மஞ்சளில் இருக்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவும்.


துளசி 


eugenol என்ற உடலுக்கு தேவையான பண்பு துளசியில் உள்ளது. இது ஃப்ரீ ரெடிகலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. 


நெய்:


நெய் - சொலியுபுள் வைட்டமின்ஸ் இருக்கிறது. தேவையான அமினோ ஆசிட்ஸ் இருக்கிறது. காலையில் சுடு தண்ணீரில் நெய் சேர்த்து குடிப்பது நல்லது. 


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.