Health Tips: தினமும் உடற்பயிற்சி செய்வது ஏன் நல்லது தெரியுமா?

Health Tips: உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் குறித்து நிபுணர்கள் தெரிவிப்பதை இங்கே காணலாம்.

Continues below advertisement

தினமும் 2 கி.மீ. தொலைவு சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல்நலனை மேம்படுத்த உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

Continues below advertisement

எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். தூங்கி எழுந்ததும் முதலில் உடற்பயிற்சி செய்வது அந்த நாளை ஆரோக்கியமாக வைக்க உதவும். இது ஒரு நாளை புத்துணர்வுடனும், சுறுசுறுப்பாகவும் வைக்கும். குடல் ஆரோக்கியம் முதல் மூளை செயல்பாடு வரை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி உதவும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நல்லது.

அப்படியே இல்லையென்றாலும் குறைந்தது 2 கி.மீ. தொலைவு நடப்பது உடல் நலனை மேம்படுத்த உதவும் என ஊட்டச்சத்து நிபுணர் சுரேந்தர் தெரிவிக்கிறார். 

இதய ஆரோக்கியம்:

சுறுசுறுப்பான நடை இதயத்தை பாதுகாக்கும்,நுரையீரல், சுவாச மண்டலம் வலுவடையும். ஸ்டெமினா அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை அளவு:

தினமும் உடற்பயிற்சி செய்வது இரத்ததில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தும் ஆகியவற்றை சீராக வைக்க உதவும்.

கால் மூட்டுகளுக்கு நல்லது:

தினமும் 15 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்வது மூட்டுகள் வலிமையுடன் இருக்க உதவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது:

நீரிழிவு நோயாளிகள் நிச்சயமாக தினமும் நடக்க வேண்டும். இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். 

உடல் எடையை நிர்வகிக்க உதவும்:

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தேவையற்ற கலோரிகள் குறையும். உடல் எடையை நிர்வகிக்க சிறந்தா வழி. வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

நடைப்பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவை?

அதிக நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம். குறிப்பிட்ட நேரத்தை வரையறுக்கவும். 

சரிவிகித உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. 

சமமான தளத்தில் நடக்க வேண்டும்.  உங்கள் உடல் சொல்வதை கேட்டு அதற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆயுர்வேத மருத்ததுவதின்படி, நடைப்பயிற்சி என்பது உடல் எடையை குறைப்பதற்கு அல்லது கட்டுக்குள் வைப்பதற்கு அல்ல. மாறாக, உடலின் இயக்கும் சீராக இருக்க உதவுவதுதான் நடைப்பயிற்சி. சாப்பிட்ட பின், 100 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறது. 

’உணவே மருந்து’ என்பதுதான் ஆயுர்வேதம் சொல்வது. நாம் எதை உட்கொள்கிறோமோ அதற்கு ஏற்றவாறே உடலின் ஆரோக்கியம் அமையும். டயட்டில் என்ன சேர்க்கிறோம்? எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம்? உள்ளிட்டவைகள் மிகவும் முக்கியம். 


 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola