தேவையான பொருட்கள்


சோளம் - 1 கப் , தண்ணீர் - 2 கப், சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்,  பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


மசாலா பொடிகள்


மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,  சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்,  மிளகுத் தூள் - 1/8 டீஸ்பூன் , சீரகப் பொடி - 1/3 டீஸ்பூன் , உப்பு - தேவையான அளவு.


செய்முறை


ஒரு கிண்ணத்தில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சோளம் மூழ்கும் அளவும் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.


3 நிமிடம் இதை கொதிக்க வைத்து இறக்கி நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும். 


பின் ஒரு கிண்ணத்தில் சேர்த்து,  அத்துடன் அரிசி மாவு, சோள மாவு சேர்த்து கிளறி விட வேண்டும்.


ஒரு கடாயை அடுப்பில் வைத்தில் அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.


எண்ணெய் காய்ந்தது அதில் சோளத்தை சேர்த்து மூடிப்போட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும். 


பின் இதை ஒரு கிண்ணம் அல்லது தட்டில் சேர்த்து அதன் மீது மிக மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டால் சுவை சூப்பரா இருக்கும்.


சோளத்தின் பயன்கள் 


சோளம் வைட்டமின் சி மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட்  நிறைந்துள்ளது.


இது சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.


சூரிய ஒளியால் சேதமாகும் சருமத்தின் சேதத்தை தடுக்க உதவலாம்.


சோள எண்ணெய், சோள மாவு போன்றவற்றையும் சருமத்துக்கும் நேரடியாக பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. அழகு சாதன பொருள்களிலும் இது பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.


சோளத்தில் வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் நிறைந்துள்ளன.


இது உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.


உடலில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் ரத்த சோகை வருவதற்கான அபாயத்தை குறைக்க சோளம் உதவும்.