தேவையான பொருட்கள்

வெற்றிலை-3

மில்க்மேய்ட்-50 கிராம்

தேங்காய் துருவல்- ஒரு கப்

டூட்டிபுரூட்டி- 4 ஸ்பூன்

குல்கந்து- 4 ஸ்பூன்

நெய்- தேவையான அளவு

செய்முறை 

முதலில் வெற்றிலையின் காம்புகளை நீக்கி, பின் துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.பின் அதில் மில்க்மேய்டை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து வதக்க  வேண்டும்.

பிறகு வதங்கிக்கொண்டிருக்கும் தேங்காய் துருவலில் அரைத்து வைத்த வெற்றிலை கலவையையும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். 

இதை ஒட்டும் பதத்திற்கு விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் இந்த கலவையை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் டூட்டிபுரூட்டி மற்றும் குல்குந்து சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும். பின் இக்கலவையை  உருண்டையாக உருட்டி நடுவில் குல்குந்து கலவையை வைத்து நன்றாக மூடி லட்டாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 

அவ்வளவுதான் சுவையான வெற்றிலை லட்டு தயார். 

வெற்றிலையின் பயன்கள் 

வெற்றிலை நம்முடைய முடியை பலப்படுத்தும். மேலும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய வெற்றிலை உதவலாம்.

வெற்றிலையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை நீக்க உதவியாக இருக்கும்.

எனவே பருக்கள் மீது அரைத்த வெற்றிலையை பூசி வந்தால் பருக்கள் மறையும் என சொல்லப்படுகிறது.

வெற்றிலை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் முகம் கழுவினாலும் பருக்கள் மறையும் என்று கூறப்படுகிறது.

சருமத்தில் அலர்ஜி இருந்தால் வெற்றிலை உதவும். தோலில் அரிப்பு, சொறி மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் வெற்றிலை சேர்த்து கொதித்த நீரில் குளிக்கலாம்.

இந்த தண்ணீரில் நாள்தோறும் குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 

சிலருக்கு உடலில் அதிகப்படியான துர்நாற்றம் வீசும், அப்படிப்பட்டவர்கள் வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாறு கலந்து குளித்து வந்தால் இந்த பிரச்சனை சரியாகும் என சொல்லப்படுகிறது.

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் வெற்றிலை பயன்படும் என்று சொல்லப்படுகின்றது.