அவல் பயன்படுத்தி சுவையான மொறு மொறு வடை செய்யலாம். மிக எளிமையாக குறைந்த நேரத்தில் இந்த வடையை செய்து விட முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வடையை விரும்பி சாப்பிடுவர். வாங்க சுவையான அவல் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


அவல் - ஒரு கப், அரிசி மாவு - இண்டு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, உப்பு - தேவையான அளவு.


செய்முறை


 அவலை தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அவலில் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


அவல் ஈரத்தை உறிஞ்சும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதுமானது.  ஐந்து நிமிடத்திற்கு பின் வைத்த பின்பு அவலுடன் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக்  இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.  அரை டீஸ்பூன் ஜீரகத்தையும் இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.


மேலும் இதில் அரை டீஸ்பூன் அளவிற்கு பெருங்காயத் தூள், நறுக்கிய சிறிது கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இப்போது இந்த மாவை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.


இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் வடையை பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். 


இப்போது தயார் செய்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


வடை நன்கு வெந்ததும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதே போன்று மீதம் இருக்கும் மாவிலும் வடை சுட்டு எடுத்துக் கொள்ளலாம். இந்த வடை மொறு மொறுவென சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க 


Poha Breakfast: வித்தியாசமான டேஸ்ட்டி காலை உணவு.. கார அவல் கொழக்கட்டை ரெசிபி...செய்முறை இதோ!


Instant Crispy Dosa: இன்ஸ்டண்ட் மொறு மொறு தோசை... அதற்கு ஏற்ற சூப்பர் சட்னி : இப்படி செய்து அசத்துங்க!