சிக்கன் 65, க்ரில் சிக்கன், சில்லி சிக்கன், சிக்கன் பக்கோடா என சிக்கனில் பல்வேறு வகைகள் செய்யலாம். சிக்கனை பொதுவாகவே அதிகமானோர் விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக காரசாரமான சில்லி சிக்கனை ஏராளமான சிக்கன் பிரியர்கள் விரும்பி உண்ணுவர். சில்லி சிக்கனை கிரேவிக்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். பிரியாணி உடன் வைத்து சாப்பிடலாம். சுவை அசத்தலாக இருக்கும். இப்போது ஸ்பைசியான சில்லி சிக்கன் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. 


தேவையான பொருட்கள்


சிக்கன் - 500 கிராம், வெங்காயம் - 1, குடைமிளகாய் - 1, இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன், சோள மாவு - 1/2 கப், பச்சை மிளகாய் - 3, சோயா சாஸ் - 2 கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை


ரெசிப்பி செய்ய எடுத்துக்கொண்ட சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சிக்கனை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 


எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 


ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாயினை காம்பு நீக்கி சேர்த்து, பேஸ்ட்டுபோல் அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இப்போது, ஒரு பாத்திரத்தில் சோள மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, 1 ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது, சோயா சாஸ், உப்பு மற்றும் நறுக்கிய சிக்கன் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து, 10 நிமிடத்திற்கு பாத்திரத்தை மூடி போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும். 


தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.  எண்ணெய் நன்கு சூடானதும், ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும்.


பின்னர், மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் வெங்காயம், குடைமிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது 1 ஸ்பூன், சோயா சாஸ் ஆகியவற்றை  சேர்த்து வதக்க வேண்டும்.


வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதில் வறுத்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சிக்கனில் சேர்த்து கிளறி விட்டு,  அடுப்பில் இருந்து சிக்கனை இறக்கிவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான சில்லி சிக்கன் தயார். 


மேலும் படிக்க


EPS Vs Udhayanidhi Stalin: இபிஎஸ்சை இழுக்காதீங்க! உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..


Akhil Mishra : மரணம் இப்படியா வரனும்... 3 இடியட்ஸ் படத்தின் பிரபல கதாபாத்திரமான அகில் மிஷ்ரா திடீர் மரணம்.