சோயா சென்னா தால் புர்ஜி ரெசிபியை மிகக் குறைந்த நேரத்தில் எளிமையாக தயாரித்து விட முடியும். இது சோயா (மீல் மேக்கர்), கடலைப்பருப்பு மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.  இதன் சுவை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இதை நீங்கள் ரொட்டி மற்றும் பரோட்டாவுடன் வைத்து சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 


தேவையான பொருட்கள் 


1 கப் சோயா (ஊறவைத்து பிழியப்பட்டது), 1/2 கப் கடலைப் பருப்பு ஊறவைத்தது, 1/4 தேக்கரண்டி பெருங்காய் தூள், 2 டீஸ்பூன் எண்ணெய், 1 தேக்கரண்டி இஞ்சி - பூண்டு விழுது, 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சீரகத் தூள், உப்பு -சுவைக்கேற்ப, 1 பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது, 1 தக்காளி - பொடியாக நறுக்கியது, 1 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது, 1 முழு உலர்ந்த சிவப்பு மிளகாய் 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலைகள் - பொடியாக நறுக்கியது, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு.


செய்முறை


1. கடலைப் பருப்பை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனை மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  ( இதனை முன்கூட்டியே வேகவைத்து எடுத்துக் கொண்டால் புர்ஜி செய்யும்போது சமைக்க குறைந்த நேரம் எடுக்கும்.)


2. இப்போது கடாயில் எண்ணெயை சூடாக்கி, முதலில் காய்ந்த மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அவற்றை வதக்க வேண்டும்.


3. அதனுடன் பெருங்காயத்தூள்,  பச்சை மிளகாய் சேர்த்து, சோயாவை எண்ணெய் மற்றும் வெங்காயத்துடன் வறுக்கவும். இதனால் அதன் பச்சைவாசம் போய்விடும்.


4. பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பருப்பு வேக வைத்த  தண்ணீரை வெளியே எடுத்து, அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.


5. சிகப்பு மிளகாய், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் மற்றும் சுவைக்கு தகுந்தாற்போல் அனைத்தையும் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால், நீங்கள் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.


6.குறைந்த தீயில் சிறிது நேரம் வேக வைத்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் சுவையான சோயா சென்னா புர்ஜி தயார். முடிக்கவும். இதை ரொட்டி அல்லது பரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 


மேலும் படிக்க


'ஆளுநர் மாளிகை புகாரில் உண்மையில்லை' கருக்கா வினோத் சிசிடிவி காட்சியை வெளியிட்ட காவல்துறை


PAK vs SA Innings Highlights: சரிந்து மீண்ட பாக்; பொறுப்பாக ஆடிய பாபர் - ஷவுத் ஷகில் - ஷதாப் கான்; தென்னாப்பிரிக்காவுக்கு 271 ரன்கள் இலக்கு