தென்னிந்திய உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு வகை என்றால் அது நிச்சயமாக இட்லி தான். பல ஊர்களில் பல வகையான இட்லிகள் பிரபலமாக இருந்தாலும் கேரளா நாட்டின் ராமசேரி இட்லி தந்து தனித்தன்மையான சுவையால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மக்களை வசியம் செய்து வைத்துள்ளது.
நெசவாளர் குடும்பம் ஒன்று தஞ்சாவூரில் இருந்து கேரளவில் உள்ள பாலக்காடு அருகில் சிறிய கிராமமான ராமசேரி கிராமத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. அவர்கள் தங்களின் பொருட்களை விற்று கொண்டு வந்தனர். அப்படி அவர்கள் வரும் போது தங்களுடன் எடுத்து வந்ததுதான் இந்த இட்லி. பின்னர் அந்த கிராமத்தின் பெயரை கொண்டு அது ராமசேரி இட்லி என பிரபலமானது. சுமார் 4 குடும்பங்களிடம் மட்டுமே இந்த இட்லியின் முறையான செய்முறை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பிரபலமான பாரம்பரியமான ராமசேரி இட்லி அவர்கள் குடும்பத்துடன் அழிந்து விட கூடாது என்ற நோக்கத்தில் கப்பா சக்க கந்தாரி உணவகத்தின் இணை உரிமையாளரும் சமையல் இயக்குநருமான செஃப் ரெஜி மேத்யூ இந்த ராமசேரி இட்லியை தத்தெடுத்துள்ளார். இன்று சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள கப்பா சக்க கந்தாரி உணவகங்களில் இந்த ராமசேரி இட்லி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை தயாரிக்கும் செய்முறை விதமே மிகவும் வசீகரமானது.
பாலக்காட்டில் கிடைக்கும் அரிசி, வெந்தயம், உளுந்து, கடல் உப்பு, உள்ளூர் தண்ணீர் மற்றும் அதன் தரம் தான் இந்த இட்லியின் தனித்துவம் வாய்ந்த சுவைக்கு காரணம். அரிசியை ஊறவைக்கும் நேரத்தை விடவும் குறைந்த நேரம் மட்டுமே பருப்பு ஊறவைக்கப்படுகிறது. இப்படி தயாரிக்கப்படும் மாவை மண் பானையில் ஒரு மஸ்லின் துணியில் ஊற்றி வேகவைக்கப்படுகிறது. மேல்புறமும் மற்றுமொரு மண்பானையால் மூடப்படுகிறது. அதனால் நீராவியானது ராமசேரி இட்லி வழியாக செல்வதால் இந்த இட்லி மிகவும் மென்மையாக வேகவைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த செய்முறையிலும் எந்த ஒரு உலோகமும் பயன்படுத்தப்படவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்