ஊறுகாய்...சொல்லும்போதே வாய் ஊறும் என்பதால் இதற்கு ரசிகர்கள் ஏராளம். இது நம்மூரில் மட்டுமே உண்ணப்படும் உணவு என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். சீனா, மெக்சிகோ, அமெரிக்கா என பல ஊர்களிலும் பல வடிவங்களில் ஊறுகாய் உண்டு, பிக்கிள்ட் வெஜிடபில்ஸ் என்ற ஃபார்மெட்டில் அவர்கள் உண்கின்றனர். பிக்கிள்ட் சேலட் என்றும் சாப்பிடுகிறார்கள்.


பத்மா லக்‌ஷ்மி சொல்லும் ரெசிபி:


இந்திய அமெரிக்க செலிப்ரிட்டியான பத்மா லக்‌ஷ்மி தென்னிந்திய ஊறுகாய் ரெசிபியை தனது சர்வதேச ஆடியன்ஸுக்காக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். எழுத்தாளர் என தன்னை நிரூபித்தவர் எலுமிச்சை ஊறுகாயிலும் அசத்தியிருக்கிறார். 51 வயதாகும் அவர் கூறிய ரெசிபியைப் பாருங்கள்..


இன்ஸ்டா வீடியோவில் கையில் எலுமிச்சை ஊறுகாய் பாட்டிலுடன் தோன்றுகிறார் பத்மா லக்‌ஷ்மி. இது ஒரு கிளாசிக் ஊறுகாய் ரெசிபி. இதை நான் எனது பாட்டி ஜிமாவிடம் கற்றுக் கொண்டேன். இதை தயாரிப்பது மிக மிக எளிது. ஆனால் அதற்கு முன்னர் கொஞ்சம் திட்டமிடுதல் அவசியம். ஏனென்றால் இதில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை ஊறுகாய் பதத்திற்கு மாற குறைந்தது 6 மாதங்கள் ஆகும்.


தேவையான பொருட்கள்:


6 எலுமிச்சைப் பழங்கள்
6 மேஜைக் கரண்டி உப்பு
2 முதல் 3 தேக்கரண்டி எண்ணெய்
5 பெரிய ஏலக்காய்கள்
அரை தேக்கரண்டி மிளகு
அரை தேக்கரண்டி அனீஸ் விதைகள்
அரை தேக்கரண்டி சீரகம்
3 தேக்கரண்டி கெய்ன்
ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
அரை தேக்கரண்டி பெருங்காயம்


இவை இருந்தால் போதும் பத்மாவின் பாட்டி சொன்ன எலுமிச்சை ஊறுகாயைச் செய்ய.






செய்முறை:


1. எலுமிச்சை பழங்களை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். முக்கியமாக அவை ஈரமாக இருக்கக் கூடாது. வெட்டிய எலுமிச்சை பழங்களை ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் போடவும். அதில் கடல் உப்பு போட்டு அதை காற்று புகாத மூடி போட்டு சூரிய ஒளி படாத இடத்தில் 6 மாதங்களுக்கு வைத்துவிடவும். ( தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் இஞ்சி, பச்சை மிளகாயை 4 மாதங்களுக்குப் பின்னர் சேர்க்கலாம்) அவ்வாறு சேர்த்துவிட்டு நன்றாக ஜாடியைக் குலுக்கி மீண்டும் வெயில் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும்.


2. 6 மாதங்களுக்குப் பின்னர் ஊறுகாய் ஜாடியை எடுத்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் ஒரு பேனை வைத்து அதில் மேற்கூறிய முழு வாசனைப் பொருட்காமல் கருகிவிடாமல் வறுத்து எடுக்கவும். பின்னர் அவற்றை ஆறவிடவும். நன்றாக ஆறியவுடன் அதை ஒரு உரலில் போட்டு இடிக்கவும். உரல் இல்லாவிட்டால் காஃபி க்ரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். கொரகொரவென்ற பதத்தில் தான் அது இருக்க வேண்டும்.


3. மீண்டும் அந்த பேனை அடுப்பில் வைக்கவும். மிதமான சூட்டில் அதில் எண்ணெய் ஊற்றவும். பின்னர் அந்த பொடியை சேர்த்து 10 முதல் 12 நிமிடங்களுக்கு வதக்கவும். அந்த பொடியின் நிறம் அடர் பழுப்பு நிறமானதும் அடுப்பை அனைத்துவிடவும்.


4. இந்தக் கலவையில் ஊறிய எலுமிச்சை மற்றும் உப்புக் கலவையைச் சேர்க்கவும். நன்றாக கிளறி விடவும். பின்னர் அதை மீண்டும் அந்த கண்ணாடி ஜாடியிலேயே போட்டுவிடவும். இது ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.