காலை உணவு ஒரு நாளைக்கான ஆற்றதை தருகிறது. காலை உணவை சரிவர சாப்பிட முடியவில்லை என்பவர்கள் பழங்கள், காய்கறிகளில் ஸ்முதி செய்து குடிக்கலாம். காலை உணவை தவிர்க்க கூடாது. காலையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, நீராவியில் வேகவைத்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். காலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் டயட்டில் இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.
மாயம் செய்யும் தண்ணீர்:
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்த வழியாகும். இரவு உணவிற்கு பிறகு,நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்போம். அதனால், காலை உணவை தவிர்க்க கூடாது. அப்படியிருக்கையில், காலையில் ஒரு க்ளாஸ் தண்ணீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது. இது உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்பு கரைவதை துரிதப்படுத்துகிறது.
இவற்றோடு உணவுப் பழங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். குடலுக்கு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை காலை உணவில் தவிர்க்க வேண்டும். பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு நோ சொல்ல வேண்டும். காலை உணவில் அதிகளவு சர்க்கரை, இனிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதெல்லாம் டிப்ஸ். காலையில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு ஏதாவது ஜூஸ், ஸ்முதி குடிக்கலாம். இல்லையெனில், காலை உணவாக ஆம்லெட்,ஸ்முதி எடுத்துக்கொள்ளலாம்.
ஓட்ஸ் மாம்பழ ஸ்மூத்தி:
என்னென்ன தேவை?
மாம்பழம் - 2
ஓட்ஸ் - ஒரு சிறிய கப் அளவு
பால் - ஒரு டம்பளர்
தேன் - தேவையான அளவு
யோகர்ட் - ஒரு கப்
பாதம் - 5
செய்முறை:
மாம்பழங்களை தோல் நீக்கி சிறிய துண்களாக நறுக்கி தனியே வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் பால், ஒட்ஸ் சேர்த்து அடுப்பில் வேக வைத்து அதை ஆறவைக்கவும்.
ஓட்ஸ் ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து, பாதாம், தேன், மாம்பழ துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து அரைத்தால் ஸ்மூத்தி தயார். இதை ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.