ஸ்சாஃப் ஃப்ரெஷ் சீஸ், முட்டை, சர்க்கரை வைத்து செய்யப்படும் இனிப்பு வகை சீஸ் கேல். இது பலருக்கும் விரும்பிய இனிப்பாக இருக்கும். சீஸ்கேக் பிரியராக இருந்தால் இந்த ரெசிபி உங்களுக்குத்தான். பேக் செய்யாமல் ஃப்ரிட்ஜில் வைத்து எளிதாக செய்துவிடலாம்.
ப்ளூபெர்ரி சீஸ் கேக் செய்முறை:
digestive biscuits -1 1/2 கப்
உருக்கிய வெண்ணெய் - 4-5 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
க்ரீம் சீஸ் - 300 கிராம்
ஐசிங் சுகர் - 3/4 கப்
ஹெவி க்ரீன் - 1 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ப்ளூபெர்ரி - ஒரு கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கார்க் ஸ்டார்ச் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2-4 டேபிள் ஸ்பூன்
பவுடர் செய்யப்பட்ட சர்க்கரை - 1/4 கப்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் பட்டர்பேப்பர் வைக்கவும். ஒரு பவுலில் digestive பிஸ்கட்களை உடைத்து சேர்க்கவும். இதோடு, உருக்கிய வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை பட்டர்பேப்பர் வைத்திள்ள பாத்திரத்தில் சேர்த்து நன்றாக செட் செய்யவும். இதை 20-30 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் க்ரீம் சீஸ் சேர்த்தை அதை நன்றாக பீட் செய்ய வேண்டும். சீஸ் ஸ்மூத் ஸ்சாஃப் ஆனதும் அதில், சர்க்கரை, வெண்ணிலா எசெசன்ஸ் சேர்த்து பீட் செய்ய வேண்டும். இதை தனியே வைக்கவும். இப்போது ஹெவி க்ரீமை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக பீட் செய்ய வேண்டும். இதை க்ரீம் சீஸ் கலவையுடன் சேர்க்கவும்.
- இந்த க்ரீம் சீஸ் கலவையை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த பிஸ்கட் பேஸ் உடன் சேர்க்கவும். கேக் மாதிரி வடிவமைக்க வேண்டும்.
- மிதமான தீயில், ஒரு பாத்திரத்தில் ப்ளூபெர்ரி பழங்களுடன் எலுமிச்சை பழ சாறு, கார்ன் ஃப்ளார், பவுடர் செய்த சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக கலக்க வேண்டும். இது கேக் மீது டாப்பிங்கஸ் உருவாக்க பயன்படுத்த வேண்டும். ப்ளூபெர்ரி மசிந்து தயாரானதும் அதை ஆற விடவும்.
- இப்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் கேக் மீது ப்ளூபெர்ரி கலவையை சேர்க்கவும். இதை 4 மணி நேரம் ஃபிரிட்ஜ்ஜில் வைக்கவும். அவ்வளவுதான் பேக் செய்யாமல் ப்ளூபெர்ரி சீஸ் கேக் தயார்.