Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Murungai Keerai Paratha Recipe: இளம் குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளின் தாய்மார்கள் முருங்கைக்கீரை அடிக்கடி உணவில் எடுத்துகொள்வது மிகவும் நல்லது. 

Continues below advertisement

முருங்கைக்கீரையில் ஆரஞ்சுப் பழத்தை விட ஏழு மடங்கு வைட்டமின் சி, தயிரைக் காட்டிலும் ஒன்பது மடங்கு புரதம், வாழைப்பழத்தை விட 15 மடங்கு பொட்டாசியம் மற்றும் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறனர். உணவில் அடிக்கடி முருங்கைக்கீரை சேர்த்துகொள்வது நல்லது. வாரத்திற்கு 2-3 முறை முருங்கைக்கீரை சாப்பிடுவது ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Continues below advertisement

முருங்கைக்கீரை:

பாலை விட கால்சியத்தின் அளவு முருங்கைக்கீரையில் அதிகம்; கேரட்டை விட வைட்டமின் ஏ பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது.  முருங்கைக்கீரை சாப்பிட்டால்  ஊட்டச்சத்து கிடைக்கும். இது வளர்சிதை மாற்றத்தை சீராக இயங்க உதவும். இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது,  கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்.

முருங்கைக்கீரை பராத்தா

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - இரண்டு கப்

இளஞ்சூடான நீர் - ஒரு கப்

ஓமம் - ஒரு ஸ்பூன்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

ஸ்டஃப்பிங்

முருங்கைக்கீரை விழுது - 200 கிராம்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2

மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து  இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். இதில் பால், நெய் சேர்க்கலாம். 
  • ஸ்டஃப்பிங்கிற்கு முருங்கைக்கீரையை கொஞ்ச நேரம் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.  அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்  மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 
  • தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
  • சுட சுட பாலக் முருங்கைக்கீரை பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம், சேர்த்து சாப்பிடலாம். 
  • அடை செய்யும்போது அதில் முருங்கைக்கீரை சேர்ப்பது மிகவும் நல்லது. 

முருங்கைக் கீரை துவையல்

என்னென்ன தேவை?

முருங்கைக் கீரை இலைகள் - 2 கப்

உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 4

நறுக்கிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

புளி - சிறதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

துருவிய தேங்காய் - ஒரு கப்

கொத்தமல்லி இழை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் உளுந்து, மிளகாய், புளி, கொத்தமல்லி இலை, கருவேப்பிலை முருங்கைக் கீரை உள்ளிட்டவற்றை நன்றாக வதக்கவும். முருங்கைக் கீரை கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும். நைஸாக அரைக்க வேண்டாம். இதை சாதம் அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். இதே முறையில் முருங்கை பூவையும் சேர்த்து துவையல் அரைக்கலாம். இதற்கு சின்ன வெங்காயம் பயன்படுத்தினாலும் நன்றாக இருக்கும்.

முருங்கைக் கீரை அடிக்கடி கிடைக்கவில்லை என்றாலும் செய்வது சுலபமாக இல்லை என்றாலோ, இட்லி பொடி அரைக்கும்போது முருங்கைக் கீரை சேர்த்து கொள்ளலாம். தனியாக முருங்கைக் கீரை பொடியாக செய்து வைக்கலாம். சாதம், இட்லி, தோசை உள்ளிட்டவற்றிற்கு சாதம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முருங்கைக் கீரை பொடி சாதம் செய்யும்போது அதில் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து செய்யலாம் ஆரோக்கியமும் கூடும். சுவையாகவும் இருக்கும்.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola