மாதவிடாய் காலத்தில் நாம் மிகவும் அலட்டிக்கொள்ளாத விஷயங்களில் ஒன்று வயிறு வீக்கம். மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்போ அல்லது மாதவிடாய் காலத்திலோ இந்த பிரச்னை ஏற்படலாம். உடலில் இதனால் ஒருவித அழற்சி இருந்துகொண்டே இருக்கும். இதனை உணவு முறையின் மூலம் மட்டுப்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் கூறுகையில் “வயிறு வீக்கம் பெரும்பாலும் பெண்கள் அனுபவிக்கும் மாதவிடாய்க்கான பொதுவான ஆரம்ப அறிகுறியாகும். புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் இது நிகழ்கிறது, இதனால் உடலில் அதிக நீர் மற்றும் உப்பைத் தக்கவைக்கிறது. உடலின் செல்கள் தண்ணீரால் வீங்கி, வீக்க உணர்வை ஏற்படுத்துகின்றன." இந்த மாதாந்திர வீக்கத்தால் நீங்கள் அவதிப்பட்டால், ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும் இந்த 5 உணவுகளை அடிக்கடிச் சாப்பிட முயற்சிக்கவும்.
மாதவிடாய் உப்புசத்தை குறைக்க 5 உணவுகள்
இஞ்சி: இஞ்சியானது மாதவிடாய் கால வீக்கத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது, இது தசை வலியைத் தணிக்கும்.
ஓமம்: ஓமத்தில் உள்ள தைமால் என்ற கலவை, இரைப்பை சாறுகளை சுரக்க உதவுகிறது மற்றும் வாயு, வீக்கம் மற்றும் பிடிப்புகளை போக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகம் உங்கள் செரிமானப் பாதைக்கு ஓரு ஆபத்துதவி எனலாம், ஏனெனில் இது உங்கள் இரைப்பைக் குழாயில் உள்ள பாதைகளைத் தளர்த்தும் ஒரு பொருளைக் கொண்டுள்ளது, இது வாயுவைக் கடக்க அனுமதிக்கிறது மற்றும் வீக்கத்தை அடக்குகிறது.
வெல்லம்: வெல்லத்தில் அதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த சோடியம் இருப்பதால் வீக்கத்தைக் குறைக்க உதவும். இது உடல் செல்களில் அமில சமநிலையை பராமரிக்க உதவுகிறது, இதன் மூலம் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பி6 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது நீர்ப்பிடிப்பு மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் தசைப்பிடிப்பை நீக்குகிறது. நுகரப்படும் போது பொட்டாசியமானது சிறுநீரகங்கள் சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது, மேலும் இது இரத்த அழுத்தத்தைக் தணிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.