கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கே மக்கள் அஞ்சும் சூழல் உள்ளது. பகல் நேரங்களில் பசிக்கு ஹோட்டலுக்கு போவதெல்லாம் நடக்காத காரியம் போல் வெயில் வதைக்கிறது. இந்த கோடையில் வீட்டிலேயே செய்யக்கூடிய சில சம்மர் ஸ்பெஷல் ரெஸிபிக்களை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


1. மாங்காய் பச்சடி


தேவையான பொருட்கள்:


1. மாங்காய் 
2. 3 முதல் 4 கப் வெல்லம்
3. உப்பு
4. எண்ணெய்
5. கடுகு விதைகள்
6. சிவப்பு மிளகாய்


செய்முறை:


மாங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அதை குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்றக் கூடாது.
பின்னர் அதை வெளியே எடுத்து குளிர விடவும்.
ஒரு பேனில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் உருகியதும் அதை வடிகட்டிக் கொள்ளவும்.
இப்போது அதை மீண்டும் பேனில் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கொதிக்கவிட்ட வெல்லத்தில் மாங்காயை போடவும். அதை நன்றாக மசித்துவிடவும். கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பேனில் கடுகு தாளிதம் செய்து அதை பச்சடியில் போட்டு இறக்கவும். சூடான மாங்காய் பச்சடி தயார்.






வெஜிடபிள் மெதுவடை


1. உளுந்தம் பருப்பு 1 கப்
2. ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி
3. பச்சை மிளகாய்
4. இஞ்சி சிறிய துண்டு
5. துருவிய முட்டைகோஸ், கேரட், குடை மிளகாய்
தேவைக்கு ஏற்ப உப்பு.
ஒரு கைப்பிடி மல்லி இலை.
வறுக்க எண்ணெய்


செய்முறை:


உளுந்து, அரிசி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியனவற்றை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
பின்னர் தண்ணீரை வடிகட்டிவிட்டு அதனை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து மாவு பொங்கப் பொங்க ஆட்டிக் கொள்ளவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு மேலே சொன்ன காய்கறீகளை போட்டுக் கொள்ளவும். நன்றாக கலந்துவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் வடையை தட்டி எடுக்கவும்.
இதனை புதினா சட்னியுடன் சாப்பிடலாம்


ரவா பாயாசம்


2 டேபிள் ஸ்பூன் ரவை
2 கப் பால்
1 டீஸ்பூன் நெய்
4 முதல் 5 முந்திரிப் பருப்புகள்
ஒரு சிட்டிகை ஏலக்காய் பவுடர்
1 டேபிள்ஸ்பூன் கன்டன்ஸ்ட் மில்க்
2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை


செய்முறை:


கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுக்கவும். பின்னர் ரவையை மிதமான சூட்டில் வறுக்கவும். ரவையில் நிறம் மாறக்கூடாது ஆனால் வறுபட்டிருக்க வேண்டும். பின்னர் கடாயில் பால் ஊற்றவும். அதன்பின்னர் ஒவ்வொரு பொருட்களாக சேர்த்து கட்டிவிழாமல் கரைத்துக் கொள்ளவும். 7 முதல் 8 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அதில் கண்டன்ஸ்ட் மில்க், சர்க்கரை சேர்க்கவும். இப்போது ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு முந்திரி, ஏலப் பொடி தூவி சுடச்சுட பரிமாறவும்.