காலை உணவு உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லவே, காலையில் ராஜா போல் உண்ணுக என்றொறு சொலவடை உண்டு. ஒரு நாளுக்கான நல்ல துவக்கம் காலை உணவு சிறப்பாக அமைவதிலிருந்தே கிடைக்கும். ஆகையால் காலை உணவை நாம் தவிர்க்கவோ இல்லை அரைகுறையாகவோ சாப்பிடக் கூடாது. சரி எல்லா நாளிலும் நம்மால் காலை உணவை சிறப்பாக சாப்பிட முடியாது. சில அலுவல்கள் இல்லை சில நேரங்களில் சமைத்துத்தர ஆள் இல்லாததால் கூட நன்றாக உண்ண முடியாமல் போய்விடும்.


ஆனால் அந்த மாதிரியான நேரங்களில் காலை உணவை தவிர்ப்பதைவிட ஏதேனும் எளிமையாக நாமே வீட்டில் செய்யலாம். அப்படியான உணவுக்கான டிப்ஸ் இதோ.


மலாய் டோஸ்ட் அல்லது க்ரீம் டோஸ்ட் ரெசிபி:
மலாய் டோஸ்ட் அல்லது க்ரீம் டோஸ்ட் செய்வது மிகவும் எளிதானது. அதை செய்வதற்கான ரெசிபி இதோ. சிறியவர்கள் முதல் முதியவர் வரை இதனை செய்து கொள்ள முடியும்.


தேவையான பொருட்கள்:
வெண்ணெய்: இரண்டு டேபிள் ஸ்பூன்
மலாய்: 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை: 4 டீஸ்பூன்
ப்ரெட்: 4 துண்டுகள்


செய்முறை:
இந்த மலாய் டோஸ்டை செய்ய முதலில் ஒரு பேனில் வெண்ணெய் போடவும். பின்னர் அது உருகும் வரை காத்திருப்போம். அது உருகி பேன் முழுவதும் படர்ந்த பின்னர் அதன் மீது பிரெட் ஸ்லைஸ்களைப் போடவும். அது நன்றாக பொன் நிறத்திற்கு வரும்வரை டோஸ்ட் செய்து கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு ஸ்லைஸிலும் தேவையான அளவு க்ரீம் போடவும். பின்னர் அதன் மீது குறைந்தது ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். அது டோஸ்ட் முழுவதும் பரவும் படி தூவவும். சூடான பால் அல்லது ஒரு கோப்பை தேநீருடன் இதனை சாப்பிடலாம். 






சர்க்கரை வேண்டாம் என நினைப்பவர்கள் உப்பு தூவி சாப்பிடலாம். அதன் மீது உலர் பழங்கள் அல்லது செர்ரி பழங்கள் போட்டு சாப்பிடலாம். இதை சாண்ட்விச் போன்றும் செய்யலாம். ஒன்றின் மீது இரண்டு பிரெட்கள் அடுக்கி இவ்வாறாக செய்யலாம். நடுவில் மலாய், சர்க்கரை அல்லது உப்புக் கலவை இருக்கும். சாப்பிட்டால் சும்மா சுவை அள்ளும்.