பொரித்த தாமரை விதைகள் மற்றும் உலர் பழ நம்கீன் ரெசிபி ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி. வேர்க்கடலை, பாதாம், முந்திரி, தேங்காய், காய்ந்த திராட்சை உள்ளிட்டவை சேர்ந்த இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். உலர் பழங்களை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். குழதைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க உலர் பழ நம்கீன் ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 100 கிராம் பொரித்த தாமரை விதைகள்
- 1 கப் வேர்க்கடலை
- 1 கப் பாதாம்
- 1 கப் முந்திரி பருப்புகள்
- 1/2 கப் தர்பூசணி விதைகள்
- 1 கப் திராட்சை
- 1 கப் தேங்காய் துண்டுகள் (நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக்கொள்ள வேண்டும்)
- 7-8 கறிவேப்பிலை
- 3 பச்சை மிளகாய்
- 1 தேக்கரண்டி கருப்பு மிளகு
- சுவைக்கேற்ப கல் உப்பு
- 2 டீஸ்பூன் தூள் சர்க்கரை
- 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் வறுத்த சீரகம்
- 3 டீஸ்பூன் நெய்
செய்முறை
1. முதலில் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை சேர்க்க வேண்டும். அதில் வேர்க்கடலையை மிருதுவாகும் வரை குறைந்த தீயில் வைத்து வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
2.அதே கடாயில், பாதாமை வறுத்து, முந்திரி மற்றும் முலாம்பழம் விதைகளை ஒவ்வொன்றாக வறுத்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.அதன் பிறகு திராட்சையை சில நொடிகள் நெய்யில் சேர்ர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.தேங்காய் துண்டுகளை வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
5.கடாயில் மேலும் சிறிது நெய் விட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்கி சிறிது நேரம் கழித்து அதனுடன் பொரித்த தாமரை விதைகளை சேர்த்து மிருதுவாகும் வரை வறுக்க வேண்டும்.
6.தேவைப்பட்டால் மேலும் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். தாமரை விதைகளை சேர்த்து வறுத்த பிறகு, அதில் அனைத்து உலர்ந்த பழங்களையும் சேர்க்கவும்.
7.இப்போது சிவப்பு மிளகாய், கல் உப்பு, கருப்பு மிளகு மற்றும் வறுத்த சீரகம் சேர்த்து அதில் அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும். தீயை அணைத்துவிட்டு, ஆறிய பிறகு நம்கீனை சுவைக்கலாம்.
மேலும் படிக்க