சலாமி ஆம்லெட் என்று பெயர் கேட்டவுடன் ரொம்ப பெரிய சிக்கலான ரெஸிபி என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இது இனோவேஷனை புகுத்தக் கூடிய எளிமையான ரெஸிபி. ஆமெல்ட்டில் பொறித்த முட்டை, சீஸ், இறைச்சி என நிறைய சேர்க்கவலாம். அத்துடன் வாசனைக்காக மூலிகைகள் சேர்க்கலாம்.


சலாமி ஆம்லெட் செய்வது எப்படி?


முதலில் சலாமி பீஸ்களை வெண்ணெய்யில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பின்னர் முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் அதை பேனில் ஊற்றவும். வெந்த பின்னர் ஆம்லெட்டில் சீஸ், மூலிகைகள் எல்லாம் சேர்க்கவும்.  அவ்வளவு தான் ஆம்லெட் தயாராகிவிட்டது.
காலை உணவுக்கு சலாமி ஆம்லெட் மிகவும் நிறைவானதாக இருக்கும். அதில் வெவ்வேறு டாப்பிங்கஸ் சேர்த்துக் கொள்ளலாம். பீட்சா போன்றே மேம்படுத்திக் கொள்ளலாம்.


இன்னும் சில ஆம்லெட் வகைகள்:


கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் அதில் கிடைக்கும்.


ஆம்லெட்டில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்துவதால், ஆம்லெட்டில் உள்ள கொழுப்புகள் நீங்கும். வெண்ணெய் பயன்படுத்தி ஆம்லெட் செய்பவர்கள், ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


ஸ்பானிஷ் ஆம்லெட் சில பகுதிகளில் ஸ்பானிஷ் டார்ட்டிலா (Spanish tortilla) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஸ்பெயினிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவு மற்றும் ஸ்பானிஷ் உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். இந்த ஆம்லெட் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சில காய்கறிகள், சீஸ் மற்றும் முட்டைகளுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வகை ஆகும்.


முட்டைகள் - 6



ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்


பெரிய உருளைக்கிழங்கு(நறுக்கியது) - 1


பெரிய வெங்காயம் - 1


உப்பு - தேவையான அளவு


மிளகுதூள் - சுவைக்கு ஏற்ப தேவையான அளவு


கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு


முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் முட்டைகளை உடைத்து ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் அதில் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து சேர்த்து நன்கு கலக்கி அடிக்கவும். பின்னர் ஒரு பெரிய வாணலியை (skillet pan) அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்திருக்கும் 3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும். சூடான ஆலிவ் ஆயிலில் நறுக்கிய உருளைக்கிழங்கை கொட்டி மென்மையாகவும், பொன்னிறமாகவும் கிழங்கு மாறும் வரை வறுக்க வேண்டும். பின்னர் முட்டை கலக்கி வைத்திருக்கும் கிண்ணத்தில் இந்த கலவையை கொட்டி விட வேண்டும்.