”தோசை அம்மா ...தோசை “ - பொரியை வைத்து உடனடியாக தயார் செய்யலாம் பன் தோசை!

இதனுடன் தயிர் மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து ,மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை மூடி 5 முதல் 10 நிமிடங்கள் ஊர வைத்துவிடுங்கள்.

Continues below advertisement

தோசை

என்னதான் தோசை ஒரு தென்னிந்திய உணவாக இருந்தாலும் கூட அதற்கென பாலிவுட் பிரபலங்களும் கூட மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். தோசை தயாரிக்க முதல் நாளே மாவினை அரைத்து அதனை புளிக்க வைக்க வேண்டும். ஆனால் சிலருக்கு உடனடியாக தோசை சாப்பிட வேண்டும் என தோன்றும் அப்படியானவர்கள் புளிக்க வைத்த மாவு இல்லையென கவலைப்பட வேண்டாம் அதற்காக  நாங்கள் உங்களுக்கு பன் தோசை எப்படி செய்வது என்பதை சொல்லித்தருகிறோம்.

Continues below advertisement




தேவையான பொருட்கள் :

பொரி (Puffed Rice) - 2 கப் 
ரவை- 1 கப் 
 தயிர் - 1 கப் 
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
 பேக்கிங் சோடா - தேவையான அளவு.
 சட்னிக்கு பச்சை மிளகாய் - 3 
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
 பூண்டு ,கிராம்பு - 5 துண்டுகள் 
துருவிய தேங்காய்த் தூள் - 5  கப்
 உப்பு  தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை - தேவையான அளவு.
 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1 டேபிள் ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 


செய்முறை :

முதலில் அரிசி பொரியை பொடியாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும் . அதனுடன் ரவையை கலந்துக்கொள்ளுங்கள். இப்போது  இதனுடன் தயிர் மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து ,மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை மூடி 5 முதல் 10 நிமிடங்கள் ஊர வைத்துவிடுங்கள்.


 அது ஊரிக்கொண்டிருக்கும் சமயத்தில் சட்னியை தயார் செய்து விடலாம். நறுக்கிய பச்சை மிளகாய், வறுத்த வேர்க்கடலை, பூண்டு கிராம்பு, தேங்காய் துருவல் மற்றும் பச்சை கொத்தமல்லி இலைகள் மற்றும்  தயிர் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் ஒரு வானலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுந்து, கடுகு, எல்லாவற்றையும் தாளித்து சட்னியுடன் சேத்துக்கொள்ளுங்கள்.பின்னர் அதே வானலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பில்லை, உளுந்து , பச்சை மிளகாயை சேர்ந்த்து அதனை ஊரவைத்த மாவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களது பன் தோசை மாவு தயார். இப்போது அடுப்பில் தோசை பேனை வைத்து அதில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பன் தோசை மாவினை ஊற்றிக்கொள்ளுங்கள். மெல்லியதாக இல்லாமல் கனமாக ஊற்றினால் தோசை சுவை இன்னும் அதிகரிக்கும். அதனை இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாரினால் சுவையான இன்ஸ்டன் பன் தோசை தயார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola