நாட்டுக்காய் வகைகளில் ஒன்றான கத்தரிக்காய் பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. இது அனைத்து காய்கறி சந்தையிலும் கிடைக்கக்கூடிய காய். ஆனால் பலர் அதன் நன்மைகள் பற்றி அறியாத பலர் இதனை ஒதுக்கிவிடுகிறார்கள். பாரம்பரியமான நமது ஆயுர்வேத மருத்துவத்தில் கத்தரிக்காயின் பங்கு இன்றியமையாதது. குறிப்பாக வெள்ளை கத்தரிக்காய் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. மேலும் அதன் வேர்கள் அஸ்துமாவிற்கு தீர்வளிக்கிறது. இந்த காயில் அதிகமான சத்துக்கள் இல்லாவிட்டாலும் இதில் பொட்டாசியம், நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.



இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

ஹெல்த்லைன் தற்போது கத்தரிக்காய் பற்றின ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த கையை உங்களின் அன்றாட உணவில் எடுத்து கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.  நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை குறைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.





உடல் எடை குறைய 

கத்தரிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக இருப்பதால் செல்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும். இதில் குறைந்த அளவிலான கலோரிகள் இருப்பதால் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக இதை உங்களின் தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை மென்மையாக உதவும். மேலும் நரம்பு தளர்ச்சியை குறைத்து வலுவாக்கும், சளி, இருமலை குறைக்கும்.  





புற்றுநோய்க்கு தீர்வு

கத்தரிக்காயில் சோலசோடின் ரம்னோசில் கிளைகோசைடுகள் (solasodine rhamnosyl glycosides) எனப்படும் ஒரு கலவை உள்ளது. இவை புற்றுநோய் உருவாக்கும் செல்களை கொள்ளும் தன்மை உடையன. மேலும் அவை மீண்டும் வளர்வதை தடுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தூக்கமின்மைக்கு தீர்வு

தூக்கமின்மை அல்லது தூக்கம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதன் மூலம் தீர்வு பெறலாம் ஏன் ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது.





பல வகை சமையல்

கத்தரிக்காயை உணவில் எளிதாக சேர்க்கலாம். அதை வறுத்து, வேகவைத்து, சுட்டு, கிரில் செய்து, வதக்கி என பல வகைகளிலும் சமைக்கலாம். ஆனால் பலர் கத்தரிக்காயை உண்டால் அரிப்பு ஏற்படும் என்ற பயத்தால் ஒதுக்குகிறார்கள். பிஞ்சு கத்தரிக்காய் சாப்பிடுவது உடம்பு மிகவும் நல்லது. முற்றின கத்தரிக்காய்களை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் அரிப்பு உண்டாகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண