உணவுகளை வேக வைக்க பல்வேறு முறைகள் வந்துவிட்டன. பல்வேறு சாதனங்கள் உருவாகி விட்டன. எல்லாவற்றிலும் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்கள் உள்ளன. அதில் உள்ள கெட்ட விஷயங்கள் நம் வாழ்வை, ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க நாம்தான் கவனமாக சமைக்க வேண்டும். எந்த வகையான சமையலில் என்ன பிரச்சினைகள் உள்ளன, அதனை எப்படி சரி செய்து ஆரோக்கியமான உணவை சமைப்பது என்பதற்கான வழிகாட்டுதல்கள் இங்கே உள்ளன. 



  1. ஏர் ஃப்ரையிங்


பிரச்சனை: ஆழமாக வறுப்பதற்கு எண்ணெய் குறைவாக, ஆரோக்கியமான மாற்றாகப் பாராட்டப்படும் ஏர் ஃப்ரையிங் சமையல் முறையில், ஒரு மறைக்கப்பட்ட அச்சுறுத்தும் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. பாரம்பரிய வறுக்கும் முறை போல் அல்லாமல், ஏர் பிரையர்கள் உணவை சமைக்க சூடான காற்றைப் பயன்படுத்துகின்றன. குறைந்த எண்ணெயுடன்அதே சுவை மற்றும் அமைப்பை வழங்குகிறது. இருப்பினும், அதில் பயன்படுத்தப்படும் சில எண்ணெய்களின் பயன்பாடு டிரான்ஸ் கொழுப்புகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும், இது நமது ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காற்று மூலம் சூடாக்கி வேக வைப்பதால், வேகும் இடங்கள் சீரற்றதாக இருக்கலாம். இதனால் ஒரு பகுதி குறைவாகவும், ஒரு பகுதி அதிகமாகவும் வேகுவதற்கு வழிவகுக்கும்.


தீர்வு: இந்த முறையை பயன்படுத்தி வறுக்கும் முன் அந்த உணவுகள் மீது பூசப்படும் எண்ணெய் டிரான்ஸ் கொழுப்புகளை உற்பத்தி செய்யாத எண்ணெயாக இருக்க வேண்டும். சீரான இடைவெளியில் பிரையரில் உணவைச் சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் உணவை ஒருமுறை பானில் டாஸ் செய்து கொள்ளலாம். கண்டிப்பாக, ஏர் பிரையரை மிதமாக பயன்படுத்த வேண்டும்.




  1. கிரில்லிங்


பிரச்சனை: உணவை சமைக்க க்ரில்லிங் ஒரு சுவையான வழியாகும். கிரில் செய்யப்பட்ட உணவில் இருந்து வரும் புகை வாசதை நாம் அனைவரும் விரும்புகிறோம். கிரில்டு சிக்கன், கிரில்டு பனீர் மற்றும் கிரில்டு மீன் ஆகியவை பலருக்கும் பிடித்த உணவுகள் ஆகும். ஆனால் அதிக வெப்பநிலையில் மற்றும் நேரடி நெருப்பில் கிரில் செய்வது ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் (HCAs) மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs) எனப்படும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கும். இந்த கலவைகள் சில தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும்.


தீர்வு: அபாயங்களைத் தடுக்க, மிதமான சூட்டில் தயார் செய்யலாம். ஊறவைக்கப்பட்ட இறைச்சியை பயன்படுத்தலாம். ஒல்லியாக வெட்டப்பட்ட இறைச்சிகளைப் பயன்படுத்தலாம். மேலும், கிரில்லர்களை முன்கூட்டியே சூடாக்கி வைப்பது, மற்றும் உணவை அடிக்கடி திருப்புவது போன்ற சரியான கிரில்லிங் நுட்பங்களைப் பின்பற்றவும்.


தொடர்புடைய செய்திகள்: Tamannaah Bhatia: வெப் சீரிஸில் கவர்ச்சி... ட்விட்டரை தெறிக்க விடும் தமன்னா.. ரசிகர்கள் கடும் விமர்சனம்..!



  1. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்தல்


பிரச்சனை: நான்-ஸ்டிக் பான்கள் உலகின் அனைத்து சமையலறைகளிலும் புகுந்துள்ளன. அவை பயன்படுத்த வசதியானவை என்பதாலும், குறைந்த எண்ணெயில் தயார் செய்ய முடியும் என்பதாலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நான்-ஸ்டிக் பான்களில் பொதுவாக டெஃப்ளான் எனப்படும் பாலிடெட்ராபுளோரோ எத்திலீன் (PTFE) பூச்சு இருக்கும். இந்த பாத்திரங்களை அதிக சூடாக்குவதால் நச்சுப் புகை மற்றும் துகள்கள் அதிலிருந்து வெளியேறி உணவில் ஒட்டிக்கொள்ளும்.


தீர்வு: நச்சுப் பொருட்கள் வெளியேறுவதைத் தடுக்க, அதிக வெப்பநிலையில் இதனை சூடாக்கக்கூடாது. பெரும்பாலும் இந்த பாத்திரங்களில் சமைப்பதை குறைப்பது நல்லது.




  1. மைக்ரோவேவ்


பிரச்சனை: ஊட்டச்சத்து இழப்பு, சீரற்ற வெப்பமாக்கல் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளிப்பாடு போன்ற மைக்ரோவேவ் தொடர்பான நிறைய உள்ளன.


தீர்வு: பாதுகாப்பான கொள்கலன்களைப் பயன்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்கவைக்க உணவை மூடுதல் மற்றும் அதிக வெப்பத்தைத் தவிர்ப்பது உள்ளிட்ட பாதுகாப்பான செயல்பாடுகளை பின்பற்றவும்.



  1. அதிகமாக வேக வைதல்:


பிரச்சனை: உணவை அதிகமாகச் வேக வைப்பதால் ஏற்படும் ஊட்டச் சத்து இழப்பு, சுவை குறைதல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் போன்ற எதிர்மறை விளைவுகளை நிறைய உள்ளன.


தீர்வு: எல்லா பொருட்களின் சரியான சமையல் நேரத்தை அறிந்து வேக வைக்க வேண்டும். வெப்பநிலை, டைமர்களைப் பயன்படுத்துதல், சமைக்கும் போது உணவைக் கண்காணித்தல் ஆகியவற்றை பின்பற்றவும்.


சமையல் ஆர்வலர்கள், சமையல் படைப்பாற்றலை வெளிக்கொணர பல்வேறு சமையல் முறைகளை தெரிந்து, முயற்சி செய்து பார்ப்பது இயற்கையானது. இருப்பினும், நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில நுட்பங்களை எச்சரிக்கையுடன் அணுகுவது முக்கியம். அபாயங்களைக் கவனத்தில் கொண்டு, வழங்கப்பட்ட தீர்வுகளைச் செயல்படுத்துவதன் மூலம், நமது நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து சுவையான உணவைத் தொடர்ந்து அனுபவிக்க முடியும்.